![]() ஒரு மாலத்தீவு மணப்பெண். | |
பாலின சமனிலிக் குறியீடு | |
---|---|
மதிப்பு | 0.357 (2012) |
தரவரிசை | 64 வது இடம் |
தாய் இறப்புவீதம் (100,000க்கு) | 60 (2010) |
நாடாளுமன்றத்தில் பெண்கள் | 6.5% (2012) |
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர் | 20.7% (2010) |
பெண் தொழிலாளர்கள் | 55.7% (2011) |
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[1] | |
மதிப்பு | 0.6604 (2013) |
தரவரிசை | 97th out of 136 |
மாலத்தீவில் பெண்கள் ( Women in the Maldives) நிலை பாரம்பரியமாகவே சற்று மேம்பட்டே இருக்கிறது. நான்கு சுல்தானாக்கள் இருந்திருப்பது இதனை ஏற்றுக் கொள்வதற்கான சான்றாக இருக்கிறது. பெண்கள் முக்காடு அணிந்து கொள்ளவும் தேவையில்லை ஒதுங்கியிருக்கவும் அவசியமில்லை. ஆனால் விளையாட்டரங்கம், மசூதி போன்ற பொது இடங்களில் அவர்களுக்காக சிறப்புத் தனிப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. திருமணத்திற்குப் பின்பு பெண்கள் தங்கள் கணவன் பெயரைச் சேர்த்துக் கொள்ளாமல் தங்கள் பெயரையே வழக்கத்தில் கொண்டிருந்தனர். ஆண்கள் பெண்கள் இருவருக்கும் சொத்தில் சம உரிமை உண்டு.
இசுலாமிய ஆண்களுக்கு நான்கு மனைவிகள் வரை இருக்கலாம். ஆனால் இக்கருத்துக்குப் பலம் சேர்க்க சிறிய சான்று கூறவேண்டுமெனில் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தனர் எனலாம்.
குடும்பத்திலும் சமூகத்திலும் இவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. மாலத்தீவின் ஆரம்பகால வரலாற்றில் ஒரு பெண் சுல்தானா அல்லது அரசியாவது ஒன்றும் அசாதாரமானதல்ல. சமுதாயத்தில் ஒரு காலத்தில் பெண்வழி மரபாகவும் பரிதுரைக்கப்பட்டுள்ளது.
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் அரசாங்கம் மற்றும் வணிக ஈடுபாடுகளில் வலுவான பதவிகளைப் பிடித்திருக்கின்றனர். பெரும்பாலான அரசு ஊழியர்கள் பெண்களாக இருக்கின்றனர். பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கையும் கல்வி கற்று முடித்தலும் ஆண் பெண் விகிதத்தில் சமமாகவே காணப்படுகிறது. பெண்கள் அமைச்சரவை மற்றும் பாரளுமன்றத்திலும் சேவை புரிகின்றனர். கூடா ஒழுக்கத்திற்காக 2013 ஆம் ஆண்டில் ஒரு 15 வயது நபருக்கு கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டு 100 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது. பின்னர், ஆவாசு தொண்டு நிறுவனம் முன்னெடுத்த சர்வதேச முறையீடு காரணமாக மாலத்தீவின் உயர் நீதிமன்றம் இம்முடிவை மாற்றிக் கொண்டது.[2]