மாலினி கௌர் | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், மத்தியப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் டிசம்பர் 2008 | |
முன்னையவர் | இலட்சுமண் சிங் கௌர் |
தொகுதி | இந்தோர்-4 |
இந்தோரின் நகரத்தந்தை | |
பதவியில் பெப்ரவரி 2015 – 2020 | |
முன்னையவர் | கிருஷ்ண முராரி மொகே |
பின்னவர் | புசியமித்திரா பார்கவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜாபூவா, மத்தியப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | இலட்சுமண் சிங் கௌர் (தி. 1983–2008) |
வாழிடம் | இந்தோர் |
கல்வி | தேவி அகல்யா விசுவவித்யாலயா |
தொழில் | அரசியல்வாதி |
மாலினி லட்சுமண் சிங் கௌர் (Malini Gaur) இந்தூரின் நகரத்தந்தையாக பணியாற்றிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். தனது கணவர் இறந்த பின்னர் காலியான இந்தோர் 4 சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிப்ரவரி 2015 இல் தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் அர்ச்சனா ஜெய்ஸ்வாலை 2.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து நகரத் தந்தை ஆனார். உமாசாக்சி சர்மா என்பவருக்கு இவ்வாறு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது பெண்மணி ஆனார்.[1] இவரது கணவர் இலட்சுமண் சிங் கௌர், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் உயர்கல்வி அமைச்சராக இருந்தவர். இவரது கணவர் பிப்ரவரி 2008 இல் தேவாஸ் அருகே வாகன விபத்தில் இறந்தார்.[2][3]