மாலிப்டினம் குறைபாடு Molybdenum deficiency | |
---|---|
மாலிப்டினம் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
நிகழும் வீதம் | 1 / 1,00,000 - 2,00,000 குழந்தைகள் |
மாலிப்டினம் குறைபாடு (Molybdenum deficiency) என்பது உணவில் மாலிப்டினம் போதிய அளவில் எடுத்துக் கொள்ளாததால் ஏற்படும் மருத்துவ விளைவுகளைக் குறிக்கிறது.
நமது உடலில் நடைபெறும் உடற்செயலியலில் மாலிப்டினத்தின் தேவையானது ஒப்பீட்டளவில் மிகச்சிறியதாகும். இயற்கையில் இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு.[1] இருப்பினும், ஊட்டச்சத்துப் பொருட்களைப் பெறுபவர்களுக்கு இக்குறை ஏற்படலாம்.[2][3]
மனித மாலிப்டினம் குறைபாடு பற்றிய விளக்கங்கள் குறைவாகவே உள்ளன. நீண்ட காலமாகப் ஊட்டச்சத்துப் பொருட்களைப் பெறுபவர் 'மாலிப்டினம் குறைபாட்டிற்கு உள்ளாகிறார். இதன் அறிகுறியாக மெத்தியோனைன் நிர்வகித்தல் பாதிக்கப்படுவதால், இரத்தத்தில் அதிக அளவில் மெத்தியோனின், குறைந்த அளவில் யூரிக் அமிலம் மற்றும் சிறுநீரில் யூரிக் அமிலம் மற்றும் சல்பேட் செறிவு குறைந்து காணப்படுவது அறிகுறியாக உள்ளது. நோயாளி மனக் கலக்கங்களால் “கோமா” நிலைக்குத் தள்ளப்படலாம்.[1] சல்பைட் ஆக்ஸிடேசு (ஒரு மாலிப்டோஎன்சைம்) குறைபாட்டின் விளைவாக ஏற்படும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா அதிகரிப்பும் மற்றும் சிறுநீர் சல்பைட், சல்பேட், தையோசல்பேட், எஸ்-சல்போசிஸ்டிடின் மற்றும் டாவுரின் ஆகியவை அடங்கும். இதன் விளைவாக வலிப்புத் தாக்கங்கள், மற்றும் மூளைச் சிதைவு/புண்கள்; இடம்பெயர்ந்த லென்ஸ்வில்லைகள்; மற்றும் சிறு வயதிலேயே மரணம் ஏற்படுதல்.
ஒரு நாளைக்கு 300 எம்.சி.ஜி அம்மோனியம் மாலிப்டேட் எடுத்துக்கொள்ளுதல் “பெறப்பட்ட மாலிப்டினம் குறைபாட்டை” மீட்டெடுக்கப் பயன்படுகிறது.[3]