மாலை நேரத்து மயக்கம் (Maalai Nerathu Mayakkam) கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில், 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கோலா பாஸ்கர் தயாரிப்பில், அம்ரித் இசை அமைப்பில், 1 ஜனவரி 2016 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. 1 ஏப்ரல் 2016 அன்று தெலுங்கு மொழியில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தின் கதையை எழுதியவர் செல்வராகவன் ஆவார். பாலகிருஷ்ணா கோலாவும் மற்றும் வாமிகா கப்பியும் இப்படத்தில் அறிமுகப் படுத்தப்பட்டனர்.[1][2][3]
பாலகிருஷ்ணா கோலா, வாமிகா கப்பி, பார்வதி நாயர், ஷர்ரன் குமார், அழகம் பெருமாள், கல்யாணி நடராசன்.
பிரபு (பாலகிருஷ்ணா கோலா), நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஐ.டி யில் வேலைபார்க்கும் ஒரு வாலிபன். உண்மையான காதலுக்காக எங்கும் அவனுக்கு, அவன் தோற்றத்தின் காரணாமாக காதல் அமையவே இல்லை.
மறுபுறம், மனோஜா (வாமிகா கப்பி) திருமணம் வேண்டாம் என்ற எண்ணம் கொண்ட நகரப்பெண். அவளின் தாயின் உடல்நல கோளாறின் காரணமாக பிரபுவை திருமணம் செய்ய நேரிடுகிறது.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிறைய இருந்ததால், பிரச்சனைகள் அதிகமாகி முறிவு ஏற்படுகிறது. பின்னர் எவ்வாறு அந்த தம்பதி மீண்டும் இணைந்தனர் என்பதே மீதிக் கதையாகும்.
திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் அறிமுக இசை அமைப்பாளர் அம்ரித் ஆவார். அம்ரித் மற்றும் விவேக் பாடல்களின் வரிகளை எழுதினர். 8 அக்டோபர் 2015 அன்று திங்க் மியூசிக் நிறுவனம் பாடல்களின் ஒலித்தொகுப்பை வெளியிட்டது.
2006 ஆம் ஆண்டு புதுப்பேட்டை வெளியான பிறகு, யுவன் சங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணாவுடன் சேர்ந்து "வைட் எலபன்ட்ஸ்" என்ற தயாரிப்பு குழுமத்தை நிறுவினார் செல்வராகவன். கார்த்தி, சந்தியா ஆகியோரை வைத்து நவம்பர் 2006-யில் மாலை நேரத்து மயக்கம் படப்பிடிப்பு துவங்கியது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா நிறுவனத்தை விட்டு வெளியேறியதால், படப்பிடிப்பு தடைபட்டது.[4][5]
50 வினாடிகள் கொண்ட முதல் முன்னோட்டம் 25 செப்டம்பர் 2015 அன்றும், 1 நிமிடம் 27 வினாடிகள் கொண்ட இரண்டாம் முன்னோட்டம் 27 நவம்பர் 2017 அன்றும் வெளியிடப்பட்டன. இந்தியத் தணிக்கைக் குழு இப்படத்திற்கு "ஏ" சான்றிதழ் வழங்கியது. 1 ஜனவரி 2016 அன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியானது. யூடியூப் இணையதளத்தில், 30 டிசம்பர் 2015 அன்று "சரக்கா" என்ற பாட்டை திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டது.
இப்படம் பரவலாக நல்ல விமர்சனத்தை பெற்றது. 5-ற்கு 2.5 மதிப்பெண்களை பெற்ற இப்படம், சீரான திரைக்கதை இல்லையென்றும், பொதுவான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட காதல் கதையை கொண்டது என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.[6][7][8]
{{cite web}}
: External link in |title=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)