மால்வன்

மால்வன், குசராத்து
માલવણ, ગુજરાત
மால்வனில் சிவாஜியின் படம்
மால்வனில் சிவாஜியின் படம்
மால்வன், குசராத்து is located in இந்தியா
மால்வன், குசராத்து
மால்வன், குசராத்து
ஆள்கூறுகள்: 21°41′N 72°42′E / 21.683°N 72.700°E / 21.683; 72.700
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
குஜராத் மாவட்டப் பட்டியல்சூரத்து
நேர வலயம்ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்)

மால்வன் (Malwan) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலம் சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய சிந்து சமவெளி நாகரிகத் தளமாகும்.[1] இந்த தளம் சில நேரங்களில் சிந்து சமவெளி நாகரிகத்தின் தெற்கு எல்லைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[2] மற்றொன்று மேலும் தெற்கே அமைந்துள்ள தொல்லியல் தளமான தைமாபாத்து கிராமம் ஆகும்.

காலம்

[தொகு]
  • முதலாம் காலம்- அரப்பா பிற்பகுதி மற்றும் அரப்பா முடிவு காலம்.[1]
  • இரண்டாம் காலம்-வரலாற்றுக் குழிகளும் தற்காலிக ஆக்கிரமிப்பும்.[1]   

அகழ்வாராய்ச்சி

[தொகு]

1967 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையின் (இந்திய தொல்லியல் ஆய்வு) முயற்சியால் இந்த தளம் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், அந்த நேரத்தில், இந்த இடம் சேதமடைந்தது மற்றும் பண்டைய குடியிருப்பின் பெரும்பகுதி ஏற்கனவே இழக்கப்பட்டது.[1]

1970 ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இயே. பி. ஜோசியும் அவரது சகாக்களும் மற்றும் கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தின் சைரசு குசுட்டெர் ஆகியோர் இதில் ஈடுபட்டனர்.[1]

கண்டுபிடிப்புகள்

[தொகு]

ஏராளமான செம்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் மற்றும் முக்கிய கண்டுபிடிப்புகளாக ஒரு வளையலும் சிறிய கம்பியும் கண்டுபிடிக்கப்பட்டன. விலங்குகளின் கண்டுபிடிப்புகளாக செம்மறி ஆடு, ஆடு, கால்நடைகள், நாய், குதிரை, பன்றி, சதுப்புநில மான் மற்றும் மீன் ஆகியவை கண்டறியப்பட்டன. .[1] சுடுமட்பாண்ட கூம்பு காளைகள், வட்ட அல்லது ரொட்டி வடிவ சுடுமண்பாண்ட கேக்குகள், கார்னேலியன் மணிகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.[3] சாடிகள், கிண்ணங்கள், வெற்று பட்டைகள் கொண்ட மிகச்சிறிய அளவு சாடிகள், உடல் மற்றும் கழுத்தில் தொங்கும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட சுழல்கள் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன.[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Archaeological Survey of India. "Excavations – Gujarat – Malwan". Excavations at Malwan. Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.
  2. Singh, Upinder (2008). A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131711200.
  3. Archaeological Survey of India. "Indian Archaeology 1969–70" (PDF). Archaeological Survey of India. p. 7. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.
  4. Archaeological Survey of India. "Indian Archaeology 1969–70" (PDF). Archaeological Survey of India. p. 11. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.