கிமு 4ஆம் நூற்றாண்டு–கிபி 7ஆம் நூற்றாண்டு | |||||||||||||||||
அரசாங்கம் | பிரபுத்துவ குடியரசு | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சட்டமன்றம் | சபை | ||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||
• தொடக்கம் | கிமு 4ஆம் நூற்றாண்டு | ||||||||||||||||
• முடிவு | கிபி 7ஆம் நூற்றாண்டு | ||||||||||||||||
| |||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
மாளவ மக்கள் (Malavas) பண்டைய இந்தியாவின் மேற்கில் வாழ்ந்த ஒரு இனக்குழுவாகும். இம்மக்கள் கிமு 4ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த போது.[1], மாளவ மக்கள் பஞ்சாப்பின் மால்வா பிரதேசத்தில் வாழ்ந்து வந்ததாக கருதப்படுகிறது. பின்னர் மாளவ மக்கள் தற்கால இராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலப் பகுதிகளில் குடியேறினர். கிபி 2ஆம் நூற்றாண்டில் மேற்கு சத்ரபதிகள் ஆட்சியிலும் மற்றும் 4ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் ஆட்சியிலும், கிபி 7ஆம் நூற்றாண்டில் சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்ட மாளவ மக்கள் வலு இழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மால்வா பிரதேசமும், பஞ்சாபிலுள்ள மால்வா பிரதேசமும் ஒரே பெயரைக் கொண்டுள்ளன. [2]
மகாபாரதம் மற்றும் பதஞ்சலி முனிவர் இயற்றிய மகாபாஷ்யம் எனும் நூல்களில் மால்வா மக்களைக் குறித்துள்ளது. [3]. மகாபாரதத்தில் மத்ர நாட்டு மன்னர் அஸ்வபதியின் மனைவியான மாலவிக்குப்.[4] பிறந்த 100 மகன்களையே மால்வா மக்கள் எனக்குறித்துள்ளது. பாணினி எழுதிய அஷ்டாத்தியாயீ சூத்திரங்களில் மாலவ மக்களை குறிப்பிட்டு கூறாமல், V.3.117 சூத்திரத்தில், ஆயுதங்களுடன் போர்த் தொழில் செய்து வாழும் இன மக்கள் என்று குறிப்பிட்டுள்ளது. பதஞ்சலி முனிவரின்[5]மகாபாஷ்யம் நூல் IV.1.68ல் காசிகா இனக்குழுவில் மாளவ மக்கள் மற்றும் சூத்திரகர்கள் அடங்கியுள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ளது.
கிமு 4ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாந்தர் இந்தியா மீது படையெடுத்து, மல்லியன் முற்றுகையின் போது கிரேக்கப் படைகளை எதிர்த்து நின்ற மாளவ மக்கள் குறித்து பண்டைய கிரேக்க வரலாற்றில் குறித்துள்ளது. [6][7] அலெக்சாந்தர் இந்தியா மீது படையெடுத்து வருகையின் போது மாளவ மக்கள் பஞ்சாப் பிரதேசத்தின் பாயும் ராவி ஆறு மற்றும் செனாப் ஆறும் கூடுமிடத்தின் வடக்க்கில் மால்வா பகுதியில் வாழ்ந்தனர்.[6]
கிமு 200ல் பஞ்சாப் பகுதியுடன் இந்தோ கிரேக்க நாடு நிறுவப்பட்டதால்[6], பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மாளவ மக்கள் தெற்கு நோக்கி இராஜஸ்தான், குஜராத் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசம் பகுதிகளில் குடிபெயர்ந்தனர். கிபி 2ஆம் நூற்றாண்டில் மால்வா மக்களில் பெரும்பாலோர் மத்தியப் பிரதேசத்தில் மால்வா பிரதேசத்தில் குடியேறினர்.[8]
கிபி 120ல் மாளவ மக்கள் தற்கால ஆப்கானிஸ்தானின் பால்க் பிரதேசத்தை ஆண்ட உத்தமபத்திரர்களின் மன்னரை சிறைபிடித்து, தெற்கு நோக்கி வந்தனர். இறுதியாக மேற்கு சத்ரபதிகள் மன்னர் நகபானர் மாளவ மக்களை வென்று உத்தமபத்திர மன்னரை மீட்டார்.[11] இது குறித்து நகபானரின் மருமகனும், இப்பகுதியின் ஆளுநருமான உஷவதத்தா நாசிக் குகை எண் 10ல் கல்வெட்டாகப் பொறித்தார்.[12]}}
கிபி 4ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் ஆட்சியின் போது பெரும்பாலான மாளவ மக்கள் தற்கால இராஜஸ்தான் மற்றும் மேற்கு மால்வா பகுதிகளில் இருந்தனர்.[7]. கல்வெட்டில் சமுத்திரகுப்தர் மாளவ மக்களை அடிபணிய வைத்ததாக அலகாபாத் தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.[13]
பிந்தைய குப்தர்களின் வரலாற்றுக் குறிப்புகளில் மாளவ மக்கள் தற்கால மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மேற்கிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குடியேறினர் எனக்குறிப்பிட்டுள்ளது.[15]
கிபி 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த யுவான்-சுவாங், தனது குறிப்புகளில், மாளவ மக்கள் [16]தற்கால மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதிகளான குஜராத் பிரதேசத்தின் கேதா, மெக்சனா பகுதிகளில் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.[17] மேலும் யுவாங்-சுவாங், மைத்திரகப் பேரரசின் [18]ஒரு பகுதியாக மாளவ மக்கள் ஆட்சி புரிந்த மால்வா பகுதி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
உஜ்ஜைன் நகரம் மால்வா பிரதேசத்தின் முக்கிய நகரமாக விளங்கியதாக கிபி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணபட்டர் தனது நூல்களில் குறித்துள்ளார். 7ஆம் நூற்றாண்டின் சாளுக்கியர் பேரரார் இரண்டாம் புலிகேசியின் அய்கொளெ கல்வெட்டுக்களில்[19], குஜராத்திலிருந்த[17] மாளவ மக்களை தோற்கடித்தாக குறிப்பிட்டுள்ளார்.
9ஆம் நூற்ராண்டில் இராட்டிரகூடர்களின் வரலாற்றுக் குறிப்புகளின்படி, மன்னர் மூன்றாம் கோவிந்தன், லாட தேசத்திலிருந்து கூர்ஜர-பிரதிகார படைகளை மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதிகளுக்கு விரட்டி அடித்தார்.[18]
மாளவ மக்கள் தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தில், மால்வா பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தனர். கிழக்கு மால்வாவின் முக்கிய நகரமாக விதிஷா]]வும்; மேற்கு மால்வாவின் முக்கிய நகரமாக உஜ்ஜைன் இருந்தது. மாளவ மக்களின் தலைநகராக அவந்தி விளங்கியது.[20]
புஷ்யபூதி வம்ச மன்னர் ஹர்ஷவர்தனர் கிபி 605ல் மாளவ நாட்டு மன்னரை தோற்கடித்தாக பாணபட்டர் தமது ஹர்சசரிதம் நூலில் குறித்துள்ளார்.
10ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்று ஆவணங்களின்படி, மாளவம் என்பதற்கு மால்வா பகுதியை ஆண்ட மாளவ மக்கள் வழித்தோன்றல்களான பரமாரப் பேரரசை மட்டுமே குறிக்கும்.[21]
Regions of Punjab: The much-truncated India's portion of present Punjab is divided into three natural regions: The Maiha, The Doaba, The Malwa. Majha: Majha starts northward from the right bank of river Beas and stretches up to the Wagha village, which marks the boundary between India and Pakistan. Majha in Punjabi means the heartland. The region is divided into three districts: 1. Amritsar, 2. Gurdaspur, 3. Tarn Taran. Doaba: The rivers Sutlei in the south and Beas in the North bound the Doaba of Puniab. The Doaba region is divided into four districts: 1. Jalandhar, 2. Nawanshahr, 3. Kapurthala, 4. Hoshiarpur. Malwa: The area south of the river Sutlej is called Malwa. The name has stuck because a clan called Molois (sometimes written as Malawis in ancient works) once ruled this area, which must have spread up to present State of Gujrat which was known as the Subah of Malwa as late as the Mughul times. Malwa the largest part of the Punjab is divided into the following 12 districts after the names of their headquarters: 1. Bathinda, 2. Barnala, 3. Faridkot, 4. Fatehgarh Sahib, 5. Ferozepur, 6. Ludhiana, 7. Mansa, 8. Moga, 9. Sangrur, 10. Muktsar, 11. Patiala, 12. Rup Nagar, 13. SAS Nagar – Mohali.