மாவல்லி சிற்றுண்டி அறை (Mavalli Tiffin Rooms) (பொதுவாக எம்டிஆர் என்று அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவில் உள்ள உணவு தொடர்பான நிறுவனங்களின் பெயராகும். பெங்களூர் நகரத்தில் முதலில் திறக்கப்பட்டது . பெங்களூர் லால் பாக் சாலையில் இந்த உணவகம் உள்ளது. மற்றும் நகரத்தின் மற்ற இடங்களில் 8 கிளைகள், அதே போல் உடுப்பி, சிங்கப்பூர், துபாய் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் இதன் கிளை உள்ளது. எம்.டி.ஆர் பிரபலமான தென்-இந்திய காலை உணவான ரவா இட்லியை கண்டுபிடித்தது.
எம்.டி.ஆர் 1924 ஆம் ஆண்டில் யக்னநாராயண மையா மற்றும் அவரது சகோதரர்களால் ஒரு உணவகமாக நிறுவப்பட்டது[1] 1970 களின் நடுப்பகுதியில் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் இருந்தபோது, உணவு கட்டுப்பாடு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, இச்சட்டம் உணவை குறைந்த விலையில் விற்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. இந்த நடவடிக்கை எம்.டி.ஆர் அதன் வணிகத்தில் உயர்ந்த தரங்களை பராமரிக்க கடினமாக இருந்தது, எனவே உடனடி உணவு வணிகத்திற்கு அது மாறியது. இரசம் மற்றும் சட்னி போன்ற சாப்பிடக் கூடிய சிற்றுண்டிகளை தயார் செய்து விற்பனை செய்தது.[2] 1970 களில் , எம்.டி.ஆர் விரிவுபடுத்தப்பட்டது, உணவகத்திற்கு அருகிலேயே எம்.டி.ஆர் பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட்டன, மேலும்சென்னையிலும் இது போன்ற ஒன்று திறக்கப்பட்டது.[3] தற்போது எம்.டி.ஆர் என்பது இரண்டு தனித்துவமான நிறுவனங்களைக் குறிக்கிறது; எம்.டி.ஆர் உணவக வணிகம் மற்றும் எம்.டி.ஆர் உணவுகள் அட்டையில் அடைக்கப்பட்ட உணவு )வியாபாரம்.
மதிய உணவுக்கு காத்திருப்பு அறையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும், சிலநேரங்களில் ஒரு மணிநேரம் வரை காத்திருக்க வேண்டும்.[4] எம்.டி.ஆரில் பரிமாறும் உணவு வழக்கமான, ஆரோக்கியமான கர்நாடகா பிராமண உணவாகும்.[4] வெளி அலங்காரத்தை விட தூய்மை மற்றும் உணவின் தரத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. பல ஆண்டுகளாக, வாடிக்கையாளர்கள் சமையலறை வழியாக உணவகத்திற்குள் நுழைந்து, சாப்பிடுவதால் தூய்மை பற்றி திருப்தி கொள்கிறார்கள்.[5]