மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்

Michael the Archangel by Guido Reni, Santa Maria della Concezione, உரோமை நகரம், 1636

மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம் என்பது அதிதூதர் மிக்கேலின் பரிந்துரையினை வேண்டும் விதமாக அமைந்த கத்தோலிக்க திருச்சபையின் மரபு மன்றாட்டுகளில் ஒன்றாகும். 1886இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ [1] திருப்பலிக்குப்பின்பு மக்களும் குருவும் இச்செபத்தை செபிக்க ஆணையிட்டார்.[2] 1964இல் செய்யப்பட்ட மாற்றத்தில் இவ்வழக்கம் கைவிடப்பட்டது. திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 24 ஏப்ரல் 1994 அன்று அளித்த மூவேளை செபத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.[3]

செபம்

[தொகு]

Sancte Michael Archangele,
defende nos in proelio;
contra nequitiam et insidias diaboli esto praesidium.
Imperet illi Deus, supplices deprecamur:
tuque, Princeps militiae Caelestis,
satanam aliosque spiritus malignos,
qui ad perditionem animarum pervagantur in mundo,
divina virtute in infernum detrude.
Amen.[4]

அதிதூதரான புனித மிக்கேலே,
எங்கள் போராட்டத்தில் எங்களைக்காத்தருளும்.
பசாசின் வஞ்சக சூழ்ச்சிகளில் எங்கள் துணையாயிரும்.
தாழ்மையான எங்கள் மன்றாட்டைக்கேட்டு
இறைவன் பசாசைக்கண்டிப்பாராக!
நீரும், விண்ணகப்படையின் தலைவரே,
மக்களைக்கெடுக்க உலகில் சுற்றித்திரியும்
பேயையும் மற்ற கெட்ட அரூபிகளையும்
இறைவலிமையால் நரகத்தில் தள்ளுவீராக.
ஆமென்.[5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Irish Ecclesiastical Review 7 (1886),1050
  2. Decree Iam inde ab anno of the Sacred Congregation of Rites of 6 ஜனவரி 1884, published in Acta Sanctae Sedis 16 (1884), pages 249–250
  3. Regina Coeli address; cf. Prayer to St Michael பரணிடப்பட்டது 2013-01-25 at the வந்தவழி இயந்திரம்; Mary Serves Cause of Life
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.
  5. திருக்குடும்ப பக்திமாலை பக். 343

வெளி இணைப்புகள்

[தொகு]