மிசிடசு விட்டேட்டசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பகாரிடே
|
பேரினம்: | மிசிடசு
|
இனம்: | மி. விட்டேட்டசு
|
இருசொற் பெயரீடு | |
மிசிடசு விட்டேட்டசு (பிளாச், 1794) | |
வேறு பெயர்கள் [2] | |
|
மிசுடசு விட்டேட்டசு (Mystus vittatus) வரியுடைய க்குள்ள கெளிறு என்பது பக்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கெளிறு மீன் ஆகும்.[3] இது ஆசிய நாடுகளான பாக்கித்தான், இந்தியா, இலங்கை, நேபாளம், வங்களாதேசம் மற்றும் அநேகமாக மியான்மர் ஆகியவற்றில் காணப்படுகிறது. மண் அடிப்பகுதியில் ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் ஓரளவு தாவரங்களுடன் உள்ள உவர்நீர் அமைப்புகளில் இது காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இதன் எண்ணிக்கை குறித்த விவாதம் உள்ளது. ஏனெனில் இந்தப் பிராந்தியத்தில் உள்ள மிசுடசு சிற்றினங்களுக்கிடையே நெருக்கமான உருவவியல் ஒற்றுமைகள் உள்ளன.[3]
இது அதிகபட்சமாக 21 செமீ நீளம் வரை வளரும்.[3] மீன்பிடித்தல், செல்லப்பிராணி வர்த்தகம் மற்றும் வாழ்விட அழிவு காரணமாகச் சமீப காலங்களில் இதன் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறியப்படுகிறது.[1] இவை முட்டையிடும் போது ஒலியை உருவாக்குகின்றன என்று அறியப்படுகிறது.[3]