மிசுவோ-நகமுரா நிகழ்வு (Mizuo–Nakamura phenomenon) என்பது ஒகுச்சி நோய் எனப்படும் இரவு குருட்டுத்தன்மை நோயில் காணப்படும் ஒரு நிகழ்வாகும்.[1] சப்பானிய கண் மருத்துவர்களான இயெண்டாரோ மிசுவோ (1876–1913) மற்றும் புன்பே நகமுரா (1886–1969) ஆகியோரின் நினைவாக பெயரிடப்பட்டது.[2]
ஒளி-தழுவல் நிலையில் விழிமையம் மஞ்சள்-சாம்பல் நிற உலோகப் பளபளப்புடன் தங்க-பழுப்பு நிறத்தில் காணப்படுவது ஒகுச்சி நோயாகும். 3 முதல் 12 மணி நேர முழுமையான ஒளி தழுவலுக்குப் பின்னர் விழிமையம் சாதாரணமாகக் காணப்படும். மேலும் பளபளப்பான மஞ்சள் விழிமையத்தின் எதிர்வினையான இந்த மறைவு மிசுவோ-நகமுரா நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.[3]