![]() | |
![]() | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | சிங்கப்பூர் நீரிணை, தென் சீனக் கடல் ஜொகூர் ![]() |
ஆள்கூறுகள் | 1°19′17″N 104°24′32″E / 1.32139°N 104.40889°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா; மலேசியா |
மொத்தத் தீவுகள் | 1 |
நிர்வாகம் | |
மிடல் ரோக் தீவு அல்லது மிடல் ரோக்ஸ் (மலாய்: Batuan Tengah; ஆங்கிலம்:Middle Rocks; சாவி: باتون تڠه ; சீனம்: 中岩礁; பின்யின்: Zhōngyánjiāo) என்பது மலேசியா, ஜொகூர், தென் சீனக் கடலின், சிங்கப்பூர் நீரிணையில் உள்ள ஒரு தீவு. 250 மீட்டர் (820 அடி) திறந்தவெளி நீரால் பிரிக்கப்பட்ட இரண்டு பாறைகளைக் கொண்ட நிலவியல் அமைப்பு.
இந்தப் பாறைத் தீவுகள், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே சர்ச்சைக்குரிய பிரதேசமாக உள்ளது. அந்தச் சர்ச்சை (பெத்ரா பிராங்கா சர்ச்சை (Pedra Branca Dispute) என அழைக்கப்படுகிறது. 23 மே 2008 அன்று, அனைத்துலக நீதிமன்றம்; ஒன்றுக்கு 15 வாக்குகள் வேறுபாட்டில் மிடல் ராக்ஸ் தீவின் மீதான இறையாண்மை மலேசியாவிற்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியது.
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தின் தென்கிழக்கில் 8.0 கடல் மைல்கள் (14.8 கிமீ; 9.2 மைல்) தொலைவிலும்; மற்றும் பெத்ரா பிராங்காவிற்கு தெற்கே 0.6 கடல் மைல்கள் (1.1 கிமீ; 0.69 மைல்) தொலைவிலும்; கடல் மட்டத்திலிருந்து 1.0 மீட்டர் (3.3 அடி) உயரத்திலும் மிடல் ரோக் தீவு உள்ளது.[1]
பெத்ரா பிராங்கா; மற்றும் சவுத் லெட்ஜ் என அழைக்கப்படும் மற்றொரு பாறை விளிம்பு; மற்றும் மிடல் ரோக் தீவு ஆகியவை மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே பெத்ரா பிராங்கா சர்ச்சைக்கு உட்பட்ட பிரதேசங்கள் ஆகும்.
மிடல் ரோக் தீவு மற்றும் சவுத் லெட்ஜ் பாறை விளிம்பு; இரண்டு தீவுகளையும் 1993-இல் சிங்கப்பூர் உரிமை கொண்டாடியபோது பெத்ரா பிராங்கா சர்ச்சை எழுந்தது.[2]
2008-ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றத்தால் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டது. மிடல் ரோக் தீவு மலேசியாவுக்கும், பெத்ரா பிராங்கா தீவு சிங்கப்பூருக்கும் சொந்தமானவை என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[3] இருப்பினும் சவுத் லெட்ஜ் பாறை விளிம்பு பிரச்சினை இதுவரையிலும் தீர்க்கப்படாமல் உள்ளது.[4][5][6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)