மிடில் கிளாஸ் அப்பாய் | |
---|---|
இயக்கம் | வேணு ஸ்ரீராம் |
தயாரிப்பு | தில் ராஜூ |
கதை | வேணு ஸ்ரீராம் |
வசனம் | மாமிடாலா த்ருபதி ஸ்ரீகாந்த் விஸ்ஸா |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | நானி சாய் பல்லவி பூமிகா சாவ்லா |
ஒளிப்பதிவு | சமீர் ரெட்டி |
படத்தொகுப்பு | பிரவின் பூரி |
கலையகம் | தில் ராஜூ |
விநியோகம் | சிறீ வெங்கடேசுவரா கிரியேசன்ஸ் |
வெளியீடு | திசம்பர் 21, 2017 |
ஓட்டம் | 144 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
மொத்த வருவாய் | மதிப்பீடு ₹70 கோடி[1] |
மிடில் கிளாஸ் அப்பாய் அல்லது எம்.சி.ஏ என்ற துவக்கத்தால் அறியப்படுகின்ற திரைப்படம் 2017 இல் வெளிவந்த இந்திய தெலுங்கு மொழி அதிரடி நகைச்சுவை படம் ஆகும். இதனை வேணு ஸ்ரீராம் எழுதி இயக்கினார்.[2] தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்தது.[3] இதில் நானி, விஜய் வர்மா, சாய் பல்லவி, மற்றும் பூமிகா சாவ்லா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்தனர். நரேஷ் மற்றும் ராஜீவ் கனகாலா ஆதரவு வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி ஆகியவற்றுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். இப்படம் 21 டிசம்பர் 2017 அன்று வெளியிடப்பட்டது.[4][5][6]
நடுத்தர வர்க்க இளைஞரான நானி ஹைதராபாத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கியுள்ளார். அவருக்கு புகைப்பட நினைவகம் எனும் திறமை உள்ளது. அதனால் ஒரு முறை பார்த்த காட்சிகளை நினைவு கூர்ந்து அதிலிருந்து அவர் தகவல் பெற இயலுகிறது. நானியின் அண்ணியான ஜோதி வாரங்கல் ஆர்டிஓ அதிகாரியாக உள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உறவுமுறையின் அடிப்படியில் மதிப்புடன் இருக்கிறார்கள். நானி பல்லவி என்ற பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறார். பல்லவி, ஜோதியின் தங்கை என அறியும் பொழுது நானி சோர்ந்து போகிறார்.
பல்லவியை திருமணம் செய்ய வேண்டும் என்றால் நானி வேலைக்கு சென்று நற்பெயர் எடுக்க வேண்டும் என பல்லவியின் தந்தை வலியுறுத்துகிறார். அதற்காக ஜோதி தன்னுடைய வீட்டினை விற்று நானிக்கு உதவுகிறார். இதனிடையே வாரங்கல் சிவா என்ற குண்டருக்கு சொந்தமான சிவசக்தி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரே எண்ணுடன் இரண்டு பேருந்துகளை ஜோதி கைப்பற்றுகிறார். குண்டன் சிவா அதிகாரியான ஜோதியை மிரட்டுகிறார். இடையே தடுக்கும் நானிக்கும், சிவாவுக்கும் இடையே பந்தையம் வைத்துக்கொள்கிறார்கள். அதன்படி ஜோதியை குறிப்பிட்ட நாளுக்குள் சிவா கொலை செய்ய வேண்டும். அந்த நாளை தாண்டிவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்யக்கூடாது.
அந்த பந்தைய ஒப்பந்தம் படி சிவா, நானியின் அண்ணி ஜோதியை தொடர்ந்து கொலை செய்ய முயல்கிறார். நானியின் காதலி பல்லவியை தொந்தரவு செய்து, நாயகனை அங்கு வர வைத்து அவருடைய அண்ணியை கடத்திவிடுகின்றனர். இறுதியாக நானி தன்னுடைய அண்ணி குடோனில் உள்ள பேருந்தில் இருப்பதை கண்டுபிடித்து மீட்கிறார்.
இந்த படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து ஆதித்யா மியூசிகில் வெளியிட்டுள்ளனர்.
இத்திரைப்படம் 21 டிசம்பர் 2017 அன்று வெளியிடப்பட்டது. இது இந்தி மற்றும் தமிழ் மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு 20 ஜூலை 2018 அன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது.[7] விஜய் சூப்பர் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் செயலி இத்திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்று பதிப்பை வாங்கியுள்ளனர்.