மிதன் சாம்செட் லாம் (1898-1981) என்பவர் இந்திய வழக்கறிஞரும், சமூக ஆர்வலரும், மும்பையின் ஷெரிபும் ஆவார்.[1] இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் முதல் இந்திய பெண் பாரிஸ்டரும், முதல் இந்திய பெண் வழக்கறிஞர் ஆவார்.[2] அகில இந்திய மகளிர் மாநாட்டில் உறுப்பினராக இருந்த மிதன் 1961-62ல் அதன் தலைவராக பணியாற்றினார்.[3] சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1962 ஆம் ஆண்டில் இந்திய குடியரசின் மூன்றாவது மிக உயர்ந்த பத்மபூசன் விருதை வழங்கி கௌரவித்தது.[4]
மிதன் சாம்செட் லாம் மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் ஒரு பார்சி குடும்பத்தில் ஜவுளி ஆலை ஊழியரான அர்தேஷீர் டாடா மற்றும் மகளிர் உரிமை ஆர்வலரான ஹெராபாய் டாடா ஆகியோருக்கு பிறந்தார்.[5][6] இவர் ஆரம்பக் கல்வியை புனே மாவட்டத்தில் உள்ள புல்கானில் பெற்றுக் கொண்டார். அங்கு அவரது தந்தை உள்ளூர் ஜவுளி ஆலையில் பணிபுரிந்தார். பின்னர் இவரது தந்தை தனது வேலையை மாற்றியபோது குடும்பத்துடன் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தார். அதன்பின் அவர் தனது பள்ளி கல்வியை முடிக்க மும்பையில் ஃப்ரீர் பிளெட்சர் பள்ளியில் (இன்றைய பெண்கள் ஜே.பி. பெட்டிட் உயர்நிலைப்பள்ளி) சேர்ந்தார். பட்டதாரி ஆய்வுகளை மும்பையின் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தொடர்ந்தார். மேலும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றதுடன் கோப்டன் கிளப் பதக்கம் வென்றார். பொருளாதாரத்தில் முதலிடம் பிடித்தார்.[2] தாயுடன் இலண்டனிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த விஜயத்தின் போது இந்தியாவில் பெண் வாக்குரிமை என்ற தலைப்பை ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உறுப்பினர்களுடன் விவாதிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்தில் தங்க முடிவுசெய்து, தனது முதுகலை பட்டத்தை வெற்றிகரமாக முடிக்க லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சேர்ந்தார். 1919 ஆம் ஆண்டில் லிங்கனின் விடுதியின் பேரறிஞராக தகுதி பெற சட்டம் பயின்றார்.[7] முதல் பெண் பாரிஸ்டர்களில் ஒருவராகவும் முதல்வராகவும் ஆனார். மிதன் முதல் இந்திய பெண் பாரிஸ்டர் ஆவார். இங்கிலாந்தில் அவர் தங்கியிருந்த போது குறிப்பிடத்தக்க இந்திய பெண் தலைவர்களான சரோஜினி நாயுடு மற்றும் அன்னி பெசன்ட் ஆகியோருடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவில் பெண் வாக்குரிமைக்காக வாதிடுவதற்காக அங்கிருந்தனர். அவர் இந்த தலைவர்களுடன் ஸ்காட்லாந்திற்கு விஜயம் செய்தார். மேலும் பொது மன்றத்திலும் உரையாற்றினார். இந்த முயற்சிகள் இந்திய பெண்களுக்கு வாக்குரிமை பெற உதவியதாக தெரிவிக்கப்பட்டது.[2]
மிதன் லாம் 1923 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பியபோது வரலாற்றில் முதல் பெண் வழக்கறிஞராக மும்பை உயர்நீதிமன்றத்தில் கடமை புரிந்தார்.[7] மேலும் ஒரு முன்னணி வழக்கறிஞரும் சுதந்திர ஆர்வலருமான பூலாபாய் தேசாயின் கூட்டாளியாக பயிற்சியைத் தொடங்கினார். மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு, அவர் சமாதான நீதிபதியாகவும், நிர்வாக நீதவானாகவும் , 1865 ஆம் ஆண்டு பார்சி திருமணச் சட்டம் குறித்த குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இது வந்த சட்டத்தின் திருத்தத்திற்கு பங்களிக்க உதவியது. 1936 இன் பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் என்று அறியப்படுகிறது. 1947 ஆம் ஆண்டில், மும்பையின் ஷெரீப்பாக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை வகித்த முதல் பெண் இவராவார்.[8] அகில இந்திய மகளிர் மாநாட்டின் (ஏஐடபிள்யூ) நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டார். 1961-62 இல் அதன் தலைவராக பணியாற்றினார். ஐ.ஐ.டபிள்யூ.சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஸ்திரீ தர்மத்தின் ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் இருந்தார். ஐக்கிய நாடுகளின் விவகாரங்களுக்கான அமைப்பின் நியமிக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றினார்.[9]
லாம் மும்பை சட்டக் கல்லூரியில் வருகை தரும் ஆசிரியராக பணியாற்றினார்.[2] இவர் இந்திய மகளிர் வக்கீல்கள் கூட்டமைப்பின் நிறுவனர்-தலைவராகவும், சர்வதேச பெண்கள் வக்கீல்கள் கூட்டமைப்பின் (ஐ.எஃப்.டபிள்யூ.எல்) துணைத் தலைவராகவும், ஐ.எஃப்.டபிள்யூ.எல் இன் 13 வது மாநாட்டிற்குத் தலைவராகவும் இருந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். இவர் பம்பாயின் மகளிர் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். சட்டப் பயிற்சியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர் மகாராஷ்டிரா மாநில மகளிர் கவுன்சிலில் (எம்.எஸ்.டபிள்யூ.சி) சேர்ந்தார். தொழிலாளர் துணைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அந்த நேரத்தில் சேரிக்கு முதன்மை மருத்துவ மையம், நர்சரி பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையம் ஆகியவற்றை நிறுவுவதற்கான முயற்சிகளை அவர் தொடங்கினார். இந்தியப் பிரிவினையை அடுத்து நிறுவப்பட்ட ஒரு அமைப்பான பாகிஸ்தானில் இருந்து அகதிகளின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான மகளிர் குழுவில் தலைவராகவும் சேர்க்கப்பட்டார். அமெரிக்காவில் நடைபெற்ற கடிதக் குழுவின் ஆசிய பட்டறை உட்பட பல சர்வதேச மாநாடுகளில் அவர் பங்கேற்றார். இந்திய அரசு 1962 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதை வழங்கியது.[4]
மிதன் லாம் வக்கீல் சோராப் லாம் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. மகள் இளம் வயதில் இறந்துவிட்டார். மகன் சோலி என்பவர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.
மிதன் லால் 1981 ஆம் ஆண்டில் 83 வயதில் இறந்தார். இவரது சுயசரிதையை கே.ஆர். காமா ஓரியண்டல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இவரது வாழ்க்கை வரலாறு என்சைக்ளோபீடியா ஆஃப் வுமன் பயோகிராஃபி என்ற கலைக்களஞ்சிய புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.[10]
{{cite web}}
: |last=
has generic name (help)
{{cite web}}
: Cite uses generic title (help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: |first=
has generic name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: External link in |title=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)