மினி | |
---|---|
மினி மம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மினி செகர்சு மற்றும் பலர் 2019
|
மாதிரி இனம் | |
மினி மம் செகர்சு மற்றும் பலர் 2019 | |
உயிரியற் பல்வகைமை | |
3 சிற்றினங்கள் |
மினி (Mini-frog) என்பது சிறிய கூர்வாய்த் தவளை சிற்றினமாகும். இவை தென்கிழக்கு மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இவை தாழ் நிலக் காடுகளில் இலைக் குப்பைகளுக்கு மத்தியில் வாழ்கின்றன. மூன்று சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் அறிவியல் ரீதியாக 2019-ல் விவரிக்கப்பட்டுள்ளன. இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றாலும், இவை மிகச் சிறிய வரம்புகளைக் கொண்டுள்ளன. இவற்றில் இரண்டு மிக அருகிய இனம் உள்ளன. மினி ஏச்சர் சிற்றினம் குறித்ததரவுகள் போதாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[1][2]
இவை சுமார் 8 முதல் 11.5 மி.மீ நீளமுடையது. மினி மம் மற்றும் மினி இசுயுள் உலகின் மிகச்சிறிய தவளை ஆகும். இப்பேரினத்தில் மிகவும் பெரிய தவளை மினி ஏச்சர் மட்டுமே. இது 15 மி.மீ. நீளமுடையது.[1][2][3][4] இவற்றை முன்பு மடகாசுகரில் உள்ள சிறிய தவளைப் பேரினமான இசுடம்ப்பியா உடன் ஒற்றுமைப்படுத்திக் குழப்பமடைந்தனர். இவை அனைத்தும் பழுப்பு நிறத் தவளைகளுடன் உருமறைப்பு கொள்கின்றன.[1]
மினி பேரினத்தில் தற்போது 3 சிற்றினங்கள் உள்ளன. அவை:[1]