எம். ஆர். மசானி | |
---|---|
பிறப்பு | மினோசர் ருஸ்தம் மசானி 20 நவம்பர் 1905 மும்பை மாகாணம் |
இறப்பு | 27 மே 1998 மும்பை | (அகவை 92)
பணி | அரசியல்வாதி |
அறியப்படுவது | தாராண்மையியம் |
மினூ மசானி அல்லது மினோசர் ருஸ்தம் மசானி அல்லது எம். ஆர். மசானி (Minocher Rustom or Minoo Masani) (20 நவம்பர் 1905 – 27 மே 1998) இந்தியாவின் மும்பை மாகாணத்தில் பிறந்த பார்சி சமூக இந்திய அரசியல்வாதியும், இராசகோபாலாச்சாரி மற்றும் என். ஜி. ரங்காவால் துவக்கப்பட்ட சுதந்திரா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ஆவார். எம். ஆர். மசானி ராஜ்கோட் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து, மூன்று முறை இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]
இலண்டனில் சட்டப்படிப்பு முடித்தவர். இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு கொண்டவர். மினூ மசானியின் பொது வாழ்க்கை, மும்பை மாநகர் மன்ற மேயராக 1943இல் தேர்வு செய்ததன் மூலம் துவங்கியது. அதே ஆண்டில் மும்பை மாகான சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1960ஆம் ஆண்டில் சுதந்திரா கட்சியில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவர்.
மினூ மசானி 92வது அகவையில் மும்பையில் உயிர் நீத்தார்.[2]
எம். ஆர். மசானி எழுதிய முதல் ஆங்கில நூலான Our India என்ற நூலை, இந்திய விடுதலைக்கு முன்னர் கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டு இருந்தது.[3]. எழுதிய பிற ஆங்கில நூல்கள்;