Ministry மேலோட்டம் | |
---|---|
முன்னிருந்த Ministry | |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | Sanchar Bhawan புது தில்லி 22°37′20″N 77°12′50″E / 22.62222°N 77.21389°E |
ஆண்டு நிதி | ₹6,000 கோடி (US$750 மில்லியன்) (2018-19 est.)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
Ministry தலைமை |
|
வலைத்தளம் | meity |
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) என்பது இந்திய மத்திய அரசின் நிர்வாக நிறுவனம் ஆகும். இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து 19 ஜூலை, 2016 அன்று தகவல் தொழில்நுட்பக் கொள்கை, உத்தி மற்றும் மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு பொறுப்பான ஒரு முழுமையான அமைச்சக நிறுவனமாக உருவாக்கப்பட்டது.[4]
முன்னதாக "தகவல் தொழில்நுட்பத் துறை" என்று அழைக்கப்பட்ட இது 2012 இல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை என மறுபெயரிடப்பட்டது. [5] தகவல் தொழில்நுட்பத் துறை 2016, ஜூலை 19 அன்று, முழு அளவிலான அமைச்சகமாக மாற்றப்பட்டது. அன்று முதல் இது மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் என்று அழைக்கப்படுகிறது, இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து பிரிக்கப்பட்டதாகும். [6] [7]
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மின்னணு இந்தியா பயிற்சித் திட்டம் 2019, என்.ஐ.சி (2019 தொகுதி) க்கான மின்னணு இந்தியா(டிஜிட்டல் இந்தியா)வேலை வாய்ப்பு அல்லது பயிற்சித் திட்டம் (வெளி இணைப்பு), வணிக செயல்முறை புற ஒப்படைப்பு உயர்வு திட்டங்கள், மின்னணு வன்பொருள் திட்டங்கள், முனைவர் பட்டத் திட்டங்கள் ஆகியவை இந்த அமைச்சகத்தின் திட்டங்கள் ஆகும்.[8]
குடிமக்கள் மேம்பாட்டிற்கான மின்-ஆளுமையை ஊக்குவித்தல், மின்னணுத்துறையில் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல்,தகவல் தொழில்நுட்பம் இயக்கச் சேவைகள் வழங்குதல், தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைத் தொழில்கள், இணைய நிர்வாகத்தில் இந்தியாவின் பங்கை மேம்படுத்துதல், மனித வளங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறையை பின்பற்றுதல், ஆய்வு மற்றும் வளர்ச்சியில் புதுமைகளை ஊக்குவித்தல், மின்னணுச் சேவைகள் மூலம் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான இணைய இடத்தை உறுதி செய்தல் ஆகியன இந்த அமைச்சகத்தின் பணிகள் ஆகும்.[8]
இந்தியா முழுவதிலும் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள்,மின்னணுச் சேவைகள், தகவல் தொழில்நுட்ப இயக்கச் சேவைகள் யாவும் மின்னணுவாக்கம் செய்யப்பட்டு இத்துறையின் உதவியோடு செயல்படுத்தப்படுகின்றன.[9]
பின்வருவது "மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய குடியரசின் மத்திய அரசு" என்பவற்றில் உள்ள அமைப்புகளின் பட்டியல். [10]
தேசிய தகவல் மையம் (என்ஐசி)
தரப்படுத்தல் சோதனை மற்றும் தரச் சான்றிதழ் இயக்குநரகம் (STQC)
சான்றளிக்கும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டாளர் (சி.சி.ஏ)
சைபர் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (கேட்)
குறைகடத்தி ஒருங்கிணைந்த சுற்றுகள் தளவமைப்பு-வடிவமைப்புப் பதிவு
இந்திய கணினி அவசரநிலை பொறுப்புக் குழு (ICERT)
IN பதிவேடு
மீடியா லேப் ஆசியா (எம்.எல்.ஏசியா)
தேசிய தகவல் மையச் சேவைகள் (NICSI) - தேசிய தகவல் மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனம்.
இந்தியாவின் தேசிய இணையப் பரிமாற்றம் (NIXI)
இணையப் பெட்டகம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
சி.எஸ்.சி இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்
இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள்
கணினி வலையமைப்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ERNET)
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டிஏசி)
மின்னணுவியல் தொழில்நுட்பத்திற்கான பொருட்களுக்கான மையம் (சி-மெட்)
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் (NIELIT) - முன்பு DOEACC சொசைட்டி
பயன்பாட்டு மைக்ரோவேவ் மின்னணுப் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி சங்கம் (SAMEER)
இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (எஸ்.டி.பி.ஐ)
மின்னணுவியல் மற்றும் கணினி மென்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு மன்றம் (ESC)
அமைச்சர்களின் பட்டியலுக்கு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (இந்தியா)பார்க்கவும். [11]
பெயர் | பதவிக்காலம் | Political party
(Alliance) |
Prime Minister | ||
---|---|---|---|---|---|
ரபி அகமது கித்வாய் | 15 ஆகஸ்ட் 1947 | 2 ஆகஸ்ட் 1951 | இந்திய தேசிய காங்கிரசு | ஜவகர்லால் நேரு | |
அம்ரித் கௌர் | 2 ஆகஸ்ட் 1951 | 13 மே 1952 | |||
ஜெகசீவன்ராம் | 13 மே 1952 | 7 டிசம்பர் 1956 | |||
ராஜ் பகதூர் | 7 டிசம்பர் 1956 | 17 ஏப்ரல் 1957 | |||
லால் பகதூர் சாஸ்திரி | 17 ஏப்ரல் 1957 | 28 மார்ச் 1958 | |||
எஸ்.கே பாட்டில் | 29 மார்ச் 1958 | 24 ஆகஸ்ட் 1959 | |||
ஜவகர்லால் நேரு | 25 ஆகஸ்ட் 1959 | 2 செப்டம்பர் 1959 | |||
ப. சுப்பராயன் | 2 செப்டம்பர் 1959 | 9 ஏப்ரல் 1962 | |||
ஜெகசீவன்ராம் | 10 ஏப்ரல் 1963 | 31 ஆகஸ்ட் 1963 | |||
அசோக்குமார் சென் | 1 September 1963 | 13 June 1964 | |||
லால் பகதூர் சாஸ்திரி | |||||
சத்ய நாராயண் சின்ஹா | 13 June 1964 | 12 March 1967 | |||
இந்திரா காந்தி | |||||
ராம் சுபா சிங் | 13 March 1967 | 14 February 1969 | |||
சத்ய நாராயண் சின்ஹா | 14 February 1969 | 8 March 1971 | |||
இந்திரா காந்தி | 9 March 1971 | 17 March 1971 | |||
ஷேர் சிங் | 18 March 1971 | 2 May 1971 | |||
ஹேமாவதி நந்தன் பகுகுனா | 2 May 1971 | 8 November 1973 | |||
ராஜ் பகதூர் | 8 November 1973 | 11 January 1974 | |||
காசு பிரம்மானந்த ரெட்டி | 11 January 1974 | 10 October 1974 | |||
சங்கர் தயாள் சர்மா | 10 October 1974 | 24 March 1977 | |||
மொரார்ஜி தேசாய் | 24 March 1977 | 26 March 1977 | ஜனதா கட்சி | மொரார்ஜி தேசாய் | |
பிரகாஷ் சிங் பாதல் | 26 March 1977 | 27 March 1977 | சிரோமணி அகாலி தளம் | rowspan="1" width="3px" bgcolor="வார்ப்புரு:Akali Dal/meta/color" | | |
ஜார்ஜ் பெர்னாண்டஸ் | 28 March 1977 | 6 July 1977 | ஜனதா கட்சி | ||
பிரிஜ் லால் வர்மா | 6 July 1977 | 28 July 1979 | |||
சரண் சிங் | 28 July 1979 | 30 July 1979 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி(S) | சரண் சிங் | |
Zulfiquarullah
(தனிப்பொறுப்பு) |
30 July 1979 | 27 November 1979 | |||
சரண் சிங் | 27 November 1979 | 7 December 1979 | |||
சியாம் நந்தன் பிரசாத் மிஸ்ரா | 7 December 1979 | 14 January 1980 | |||
இந்திரா காந்தி | 15 January 1980 | 16 January 1980 | இந்திய தேசிய காங்கிரசு | இந்திரா காந்தி | |
பீஷ்ம நாராயண் சிங் | 16 January 1980 | 3 March 1980 | |||
[[சி. எம் ஸ்டீபன்] | 3 March 1980 | 2 September 1982 | |||
அனந்த் பிரசாத் சர்மா | 2 September 1982 | 14 February 1983 | |||
இந்திரா காந்தி | 14 February 1983 | 31 October 1984 | |||
ராஜீவ் காந்தி | 31 October 1984 | 4 November 1984 | ராஜீவ் காந்தி | ||
வி.என். காட்கில் | 4 November 1984 | 31 December 1984 | |||
ராம் நிவாஸ் மிர்தா(தனிப்பொறுப்பு) | 31 December 1984 | 22 October 1986 | |||
அர்ஜுன் சிங் | 22 October 1986 | 14 February 1988 | |||
வசந்த் சாத்தே | 14 February 1988 | 25 June 1988 | |||
பீர் பகதூர் சிங் | 25 June 1988 | 30 June 1989 | |||
கிரிதர் கமாங்(தனிப்பொறுப்பு) | 4 July 1989 | 2 December 1989 | |||
வி. பி. சிங் | 2 December 1989 | 6 December 1989 | ஜனதா தளம் | வி. பி. சிங் | |
கே.பி உன்னிகிருண்ஷ்ணன் | 6 December 1989 | 23 April 1990 | Congress (S) | ||
ஜனேஸ்வர் மிஸ்ரா | 30 April 1990 | 5 November 1990 | ஜனதா தளம் | ||
வி. பி. சிங் | 6 November 1990 | 10 November 1990 | |||
சந்திரசேகர் | 10 November 1990 | 21 November 1990 | சமாஜ்வாடி ஜனதாக் கட்சி (Rashtriya) | சந்திரசேகர் | |
சஞ்சய் சிங் | 22 November 1990 | 21 June 1991 | |||
ராஜேஷ் பைலட்(தனிப்பொறுப்பு) | 21 June 1991 | 17 January 1993 | இந்திய தேசிய காங்கிரசு | பி. வி. நரசிம்ம ராவ் | |
சுக்ராம்(தனிப்பொறுப்பு) | 17 January 1993 | 16 May 1996 | |||
அடல் பிகாரி வாச்பாய் | 16 May 1996 | 1 June 1996 | பாரதிய ஜனதா கட்சி | அடல் பிகாரி வாச்பாய் | |
பேனி பிரசாத் வர்மா | 1 June 1996 | 19 March 1998 | சமாஜ்வாதி கட்சி | தேவ கௌடாஐ. கே. குஜரால் | |
அடல் பிகாரி வாச்பாய் | 19 March 1998 | 21 March 1998 | பாரதிய ஜனதா கட்சி | அடல் பிகாரி வாச்பாய் | |
[பூட்டா சிங்]] | 21 March 1998 | 19 April 1998 | |||
அடல் பிகாரி வாச்பாய் | 19 April 1998 | 20 April 1998 | |||
சுஷ்மா சுவராஜ் | 20 April 1998 | 11 October 1998 | |||
அடல் பிகாரி வாச்பாய் | 11 October 1998 | 6 December 1998 | |||
[ஜக்மோகன்] | 6 December 1998 | 8 June 1999 | |||
அடல் பிகாரி வாச்பாய் | 8 June 1999 | 13 October 1999 | |||
இராம் விலாசு பாசுவான் | 13 October 1999 | 1 September 2001 | ஐக்கிய ஜனதா தளம்(U) | ||
பிரமோத் மகாஜன் | 2 September 2001 | 28 January 2003 | பாரதிய ஜனதா கட்சி | ||
அருண் சோரி | 29 January 2003 | 22 May 2004 | |||
தயாநிதி மாறன் | 23 May 2004 | 15 May 2007 | திராவிட முன்னேற்றக் கழகம் | மன்மோகன் சிங் | |
ஆ. ராசா | 16 May 2007 | 14 November 2010 | |||
மன்மோகன் சிங் | 15 November 2010 | இந்திய தேசிய காங்கிரசு | |||
கபில் சிபல் | 19 January 2011 | 26 May 2014 | |||
இரவி சங்கர் பிரசாத் | 26 May 2014 | 5 July 2016 | பாரதிய ஜனதா கட்சி | நரேந்திர மோதி |
{{citation}}
: Check date values in: |accessdate=
and |archive-date=
(help)