மின்னளவைமானி (Voltameter) அல்லது கூலம்பளவி அல்லது வோல்டாமானி என்பது ஓர் அறிவியல் அளவி ஆகும். இது மின்சாரத்தின் அளவை,அதாவது (மின்னூட்டத்தை) அளக்கப் பயன்படுகிறது. மின்சார அளவின் SI அலகு கூலம்பு ஆகும்.
வோல்டாமானியை வோல்ட்டளவியுடன் அதாவது மின்னழுத்த அளவியுடன் குழப்பிக் கொள்ள கூடாது. வோல்ட்டளவி மின்னிலையை அல்லது மின்னழுத்தத்தை அளக்கிறது. மின்னிலைக்கான SI அலகு வோல்ட் ஆகும்.
வோல்டாமானி என்பது ஒரு மின்னாற்பகுப்புக் கலம் ஆகும்.குறிப்பிட்ட நேரத்தில் எதிர்முனையில் படியும்/விடுபடும் தனிமத்தின் எடையைக் கண்டறிந்து அளவீடு எடுக்கப்படும்.
வெள்ளி மின்னளவைமானி, செம்பு மின்னளவைமானி, பாதரச மின்னளவைமானி எனப் பலவகை மின்னளவைமானிகள் உள்ளன.
இது மிகவும் துல்லியமான வகையாகும். இதில் வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலில் இரண்டு வெள்ளித் தட்டுகள் வைக்கப்பட்டிருக்கும். இதில் மின்னோட்டம் பாயும்போது நேர்முனையில் உள்ள வெள்ளி கரைந்து எதிர்முனையில் சென்று படியும். செய்முறையின் தொடக்கத்தில் எதிர்முனையின் பொருண்மை கண்டறியப்படும். பிறகு குறிப்பிட்ட நேரம் மின்னோட்டத்தைப் பாயவிட்டு மறுபடியும் எதிர்முனையின் பொருண்மை கண்டறியப்படும்.
நெர்முனையும் எதிர்முனையும் செம்பாலான தட்டுகள் அமைவதைத் த்விர மற்றபடி இது வெள்ளி வோல்டாமானியை ஒத்த்தே. இதில் கந்தக அமிலமூட்டிய செம்புச் சல்பேட்டுக் கரைசல் பயன்படும். இது வெள்ளி வோல்டாமானியை விட விலை மலிவானது. அதேபோல, இதன் துல்லியமும் குறைவானதே.
இது நேர்முனையும் எதிர்முனையும் பிளாட்டினம் தட்டுகளும் கரைசல் நீர்த்த கந்தக அமிலமும் கொண்டது. இதில் எதிர்முனையில் நீரகம் விடுபடுகிறது. இந்த நீரகம் அளவீடு செய்த குழலில் திரட்டப்படுகிறது. பிறகு அதன் பருமன் கண்டறியப்படுகிறது.இப்பருமனின் மதிப்பு செந்தர அழுத்த்த்துக்கும் வெப்பநிலைக்கும் மாற்றப்படுகிறது. பருமனில் இருந்து அதன் பொருண்மை கணக்கிடப்படுகிறது. இது ஃஓப்மன் வோல்டாமானி எனவும் அழைக்கப்படுகிறது.
காண்க, இதள் கூலம்பளவி
பாரடே இந்த ஆய்கருவியை வோல்ட்டா மின்னளவி என அழைத்தார். இதைப் பின்னர் டேனியல் வோல்டாமானி என அழைத்தார்.[1]