மியாமி பாறை முகடு என்பது ஒரு தொடர்ச்சியான சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த கடலோரப் பாறைமுகடு ஆகும், இது முன்னர் எவர்க்லேட்ஸ் சுற்றுச்சூழலின் பகுதிகள் உட்பட தெற்கு புளோரிடாவின் பெரும் பகுதியை உள்ளடக்கியது. புளோரிடாவின் வடக்கு மியாமி-டேட் கவுண்டியிலிருந்து ( வடக்கு மியாமி கடற்கரையின் தோராயமான அகலாங்கு) தெற்கே மேல் புளோரிடா கீசு வரை மரபான ஒரு மேட்டுச் சமவெளி உள்ளது, மேலும் இது தென்மேற்கே எவர்க்லேடுசு தேசிய பூங்கா வரை நீண்டுள்ளது.
கடலோர முகடு, அழிந்து வரும் ஊசிமரப் பாறைக்காடுகளின் மரபான ஒரு பகுதியாக இருந்தது, இது முகட்டின் நெடுகே நீள்வாட்டில் வளர்ந்தது. [1] சுற்றுச்சூழல் தாவரத்திரளாக தெற்கு புளோரிடா பைனசு எல்லியோத்தி வ்ளர்ப்பு தென்சா வகை ஊசி மரங்கள் இடையிடையே அங்கங்கே வெப்பமண்டல் வன்கட்டை மரங்களோடு ஒரு தொடர்ச்சியான பெரும்பரப்பில் பரவியுள்ளது. [2] புளோரிடா கீசும் மற்றும் பகாமாசும் ஆகிய பகுதிகளில் மட்டும் உலகளவிலான 20% அளவு அழிந்துவரும் ஊசிமரப் பாறைக்காட்டுத் தாவரத்திரள் அமைந்துள்ளது,[1] மியாமி பாறை முகட்டுத் தாவரத்திரள் காட்டுத்தீயாலும் மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் இயற்கை தீயாலும் தாக்கப்படுகின்றன; இது தாவரங்களையும் அங்கு வாழும் குடிமக்களையும் கட்டுபடுத்துகிறது, இது உயிர்யல் பன்மை வாய்ந்த சூழல் மன்டலமாக விளங்குகிறது.[3] [4] அடித்தரையின் நிலக்கூறும் (பெரும்பாலும் மார்ல்) காலநிலையும் தாவரங்களின் உயரத்தைக் கட்டுபடுத்துகின்றன; எனவே ஒரு முதிர்ந்த துணை வெப்பமண்டல மரங்கள் பொதுவாக 59 அடிகள் (18 m) மியாமி பாறை முகட்டுக் காட்டில் உள்ளன. [5] இன்று சமூக வளர்ச்சியால் பெருமளவில் தாவர வளங்கள் அகற்றப்பட்டுவிட்டன, மேலும் சுற்றுச்சூழல் அமைப்புகளின எஞ்சிய பகுதிகள் தென்கிழக்கு புளோரிடாவில் சிறுசிறு கூறுகளாக சிதறடிக்கப்பட்டுவிட்டன; அவை இப்போது முதலில் இருந்த சிறிய பகுதிகளையே உள்ளடக்கியுள்ளன. [1] சிம்ப்சன் பார்க் காம்பாலிலும் ஆலிஸ் வைன்ரைட் பூங்காவிலும் சின்னஞ்சிறு பகுதிகளில் அங்கங்கே வெப்பமண்டலக் கடினமரக் சிறுமரவகைகள் உள்ளன.