மிருணாள் தியோ-குல்கர்னி | |
---|---|
![]() | |
பிறப்பு | 21 சூன் 1971[1] புனே, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
அறியப்படுவது | மீராபாய் சோன் பாரி |
பெற்றோர் | விஜய் தியோ (தந்தை) வீணா தியோ (தாய்) |
வாழ்க்கைத் துணை | Ruchir Kulkarni (தி. 1990) |
பிள்ளைகள் | விராஜாஸ் குல்கர்னி (பி. 1992)[2] |
உறவினர்கள் | ஜெய்ராம் குல்கர்னி (மாமனார்) |
மிருணாள் தியோ-குல்கர்னி (Mrinal Deo-Kulkarni) என்பவர் ஓர் இந்திய நடிகை மற்றும் இயக்குநராவார். இவர் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்ததற்காக அறியப்படுகிறார்.[3] தூர்தர்ஷனில் மீராபாய் பாத்திரத்தில் நடித்ததற்காகவும், ஸ்டார் பிளசின் சன் பாரியில் தேவதையாக நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.
இவர் மராத்திய மொழி மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார்.
இவர் புனேயில் ஒரு மராத்தி கொங்கனஸ்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் டாக்டர் விஜய் தியோ மற்றும் டாக்டர் வீணா டியோ ஆவர். இவர் புனே பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவருக்கு மதுரா என்ற சகோதரி உள்ளார். நோய்வாய் பட்ட இவரது தந்தை 2019 ஏப்ரல் 11 அன்று இறந்தார்.[4]
இவர் 1990 இல் தனது குழந்தை பருவ நண்பரான ருசிர் குல்கர்னியை மணந்தார். இவர்களுக்கு விராஜாஸ் என்ற மகன் உள்ளார். விராஜாஸ் மராத்தி திரையுலகில் பணியாற்றி வருகிறார்.[5][6]
மராத்தி தொலைக்காட்சித் தொடரான ஸ்வாமியில் பேஷ்வா மாதவராவின் மனைவி ரமாபாய் பேஷாவே வேடத்தில் நடித்ததன் மூலம் மிருணாள் தன் 16 வயதில் நடிப்புத் துறையில் அறிமுகமானார். இது இவருக்கு புகழைப் பெற்றுக் கொடுத்தது. இந்தத் தொடரில் மாதவராவ் வேடத்தில் ரவீந்திர மங்கனி நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் பெரிதாக அக்கறை காட்டாமல், மெய்யியலில் முனைவர் பட்டத்தை முடிக்க விரும்பினார். ஆனால் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன, இறுதியாக இவர் 1994 இல் நடிப்பில் ஈடுபட முடிவு செய்தார். ஸ்ரீகாந்த் ( சரத்சந்திர சாட்டர்ஜியின் புதினங்களில் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட தொலைக்காட்சித் தொடர்), தி கிரேட் மராத்தா, திரௌபதி, ஹஸ்ரடீன், மீராபாய், டீச்சர், கேல், ஸ்பர்ஷ், சோன்பாரி உட்பட பல வெற்றிகரமான பாத்திரங்களைப் பெற்று இவர் நடிப்பைத் தொடர்ந்தார். ஆல்பா மராத்தி தொலைக்காட்சி அலைவரிசையில் அவந்திகா என்ற தொடரில் இவரது பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மீராபாய், திரௌபதி, அகில்யா பாய் ஒல்கர், ரமாபாய், ஜிஜாபாய் போன்ற பல வரலாற்றுப் பாத்திரங்களில் நடித்ததற்காக மிருணாள் பிரபலமானவர். இவர் இதுவரை 22 இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செய்துள்ளார். இவர் இயக்கத்தில் கவனம் செலுத்த தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதை நிறுத்தினார்.
இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
மிருணாள் குல்கர்னி மராத்தி மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
பிரேம் மஞ்சே... பிரேம் மஞ்சே.... பிரேம் அஸ்டா என்ற மராத்தித் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மிருணாள் குல்கர்னி. படத்தை இயக்கியது மட்டமல்லாமல் படத்திற்கான கதையையும் மிருணால் குல்கர்னி எழுதினார்.[7] அதன் பிறகு மராத்தி வரலாற்று நாடகப் படமான ராம மாதவ் படத்தையும் இயக்கினார்.[8]
குல்கர்னி பின்வரும் விருதுகளை வென்றுள்ளார்-