மிர்பூர்-காசைச் சேர்ந்த பிரம்மா சிலை என்பது, நவீன பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கிடைத்த பிரம்மாவின் புகழ்பெற்ற வெண்கல சிலையாகும். இது குப்தர் காலத்தை (ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டை) சேர்ந்தது. [1] இது பிரம்மாவின், தொடக்ககாலத்தைச் சேர்ந்த, [2] உலோகச் சிலையாகும். மிர்பூர் காசு படிமவியல் கலை மரபைச் சேர்ந்ததாக அறியப்படும் ஒரே சிலையும் இதுவேயாகும். [3] இது குப்தர்கள் காலத்தின் "ஒரு மகத்தான கலைப் படைப்பு" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. [4]
1929 [5] ஆம் ஆண்டு ஹென்றி கௌசென் [6] (Henry Cousens) என்பவர் மிர்பூர்-காசு அருகே ஒரு வயலில் இதனைக் கண்டறிந்ததாக அறிவித்துள்ளார். சிலர் பிராமணாபாத்தில் கண்டறிந்ததாகவும் தெரிவிக்கின்றனர். [7]
நான்கு தலை கொண்ட பிரம்மாவின் வெண்கலச் சிலை 3 அடி உயரம் கொண்டது. பிரம்மா, இரண்டு கைகளுடன், வேட்டியும், முப்புரிநூலும் அணிந்து, ஆபரணங்கள் ஏதுமின்றி நின்ற கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளார். [8] வாசுதேவ சரனா அகர்வாலா (Vasudeva Sharana Agrawala) இதை "இந்தக் காலகட்டத்தில், உலோக வார்ப்புக் கலையின் விதிவிலக்கான நல்ல மாதிரி" என்று குறிப்பிடுகிறார். [9] "குப்தர்கள் காலத்திய உலோக வார்ப்புக் கலை மேதையின் சிறந்த கலைவண்ணம்" ஆகும் என்று ஸ்ரீராம மற்றும் சங்கர கோயலா (Śrīrāma and Śaṅkara Goyala) ஆகியோர் சொல்வது குறிப்பிடத்தக்கது . [10] இச்சிலை சிந்துவில் கண்டறியப்பட்ட குப்தர்களின் உலோகக் கலைக்கான சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறப்படுகிறது. [11]
இச்சிலை கராச்சி தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய கலையுடன் ஒப்பீடு
[தொகு]
மிர்பூர் காசில் கண்டறியப்பட்ட பிரம்மா சிலை, கலை மற்றும் வரலாற்றாசிரியர்களால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மற்ற பிரம்மாவின் கலைப்படைப்புகளுடன் ஒப்பிட்டு அறிவதற்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. [12]
- ↑ Indian Art of the Gupta Age: From Pre-classical Roots to the Emergence of Medieval Trends, Editors Śrīrāma Goyala, Śaṅkara Goyala, Kusumanjali Book World, 2000, p. 85
- ↑ Essays on Buddhist, Hindu, Jain Iconography & Epigraphy, Gouriswar Bhattacharya, International Centre for Study of Bengal Art, 2000, p. 236
- ↑ Early Brass Image of Bodhisattva, J.C. Harle, in South Asian Archaeology 1975: Papers from the Third International Conference of the Association of South Asian Archaeologists in Western Europe Held in Paris, J. E. Van Lohuizen-De Leeuw, BRILL, 1979 p. 134
- ↑ Arts of Asia, Volume 4
Publisher Arts of Asia, 1974, p. 110, The immense artistic creation of the period was distinguished by the exercise of greater restraint, elegance of form and spiritual expression.
- ↑ The Antiquities of Sind: With Historical Outline, Henry Cousens, Bhartiya Publishing House, 1929 - Sindh (Pakistan)
p.10
- ↑ Sind Quarterly, Volume 8, Contributor Shah Abdul Latif Cultural Society, Publisher Mazhar Yusuf, 1980, p.24 "absolutely magnificent brass image of Brahma (7i) from the neighbourhood of Mirpur Khas".
- ↑ Five deities of Panchopasana, G. Bhattacharya, in Studies in Hindu and Buddhist Art edited by P. K. Mishra, p. 199-200
- ↑ Indian Costume, Govind Sadashiv Ghurye, Popular Prakashan, 1966, Figure 100.
- ↑ Indian Art - Volume 2, Vasudeva Sharana Agrawala, Prithivi Prakashan, 1977, Page 43
- ↑ Indian Art of the Gupta Age: From Pre-classical Roots to the Emergence of Medieval Trends, Editors Śrīrāma Goyala, Śaṅkara Goyala, Kusumanjali Book World, 2000, p. 85
- ↑ Vakataka - Gupta Age Circa 200-550 A.D., Ramesh Chandra Majumdar, Anant Sadashiv Altekar, Motilal Banarsidass Publ., 1967, p. 435
- ↑ South Asian Archaeology 1975: Papers from the Third International Conference of the Association of South Asian Archaeologists in Western Europe Held in Paris, J. E. Van Lohuizen-De Leeuw
BRILL, 1979. The image of the Brahma from Mirpur Khas is on the cover. https://books.google.com/books?id=H2GW1PTHQ1YC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false