மீனா சிங் | |
---|---|
Member பதினான்காவது மக்களவை, பதினைந்தாவது மக்களவை | |
தொகுதி | பிக்ரம்கஞ்ச் மக்களவைத் தொகுதி, ஆரா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1962 வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
துணைவர் | அஜித் குமார் சிங் |
பிள்ளைகள் | 1 |
வாழிடம்(s) | அர்ரா, பட்னா, பீகார் |
முன்னாள் கல்லூரி | பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
மீனா சிங் (Meena Singh ) (பிறப்பு: சனவரி 1, 1962) உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியில் பிறந்தார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2008ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். இவர் பதினான்காவது மக்களவைக்கு பிக்ரம்கஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்தும். பதினைந்தாவது மக்களவைக்கு ஆரா மக்களவைத் தொகுதியிலிருந்தும் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
நைனா தேவி, இராமேசுவர் சிங் தம்பதிகளுக்கு மீனாசிங் மகளாகப் பிறந்தார். இவர் 1982இல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் கலைகளில் பட்டம் பெற்றார். இந்திய அரசியலில் நுழைவதற்கு முன்பு, இவர் தனது கணவரின் தொகுதி மக்களுக்கு சேவைப்பணி செய்து வந்தார். வீட்டிற்கு நல்ல மனைவியாகவும் இருந்துள்ளார்.
கணவர் இறந்த பிறகு நடந்த பிக்ரம்கஞ்ச் இடைத்தேர்தலில் 2008ஆம் ஆண்டு மீனா சிங் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ராகுல் ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டதன் காரணமாக ஆறு மாதங்களுக்குப் பிறகு இவர் பதவி விலகினார்.[3] பின்னர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 2009 ஆம் ஆண்டில் அர்ரா மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2009 முதல் 2014 வரை இவர் பதவியிலிருந்தார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.[4].