மீன் குழம்பும் மண் பானையும் | |
---|---|
இயக்கம் | அமுதேஸ்வர் |
தயாரிப்பு | துஷ்யந்த் ராம்குமார் |
இசை | டி.இமான் |
நடிப்பு | பிரபு காளிதாஸ் ஜெயராம் ஆஷ்னா சாவேரி பூஜா குமார் |
ஒளிப்பதிவு | லஷ்மண் குமார் |
படத்தொகுப்பு | ரிச்சர்ட் கெவின் |
கலையகம் | ஈசன் புரடக்சன்ஸ் |
விநியோகம் | காஸ்மோ வில்லேஜ் |
வெளியீடு | 11 நவம்பர் 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மீன் குழம்பும் மண் பானையும் (Meen Kuzhambum Mann Paanaiyum) அமுதேஸ்வர் எழுதி இயக்கி 2016இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் படமாகும். இது மேற்கு மலேசியா, இந்தோனேசியா, மற்றும் கம்போடியா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதனை துஷ்யந்த் ராம்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சாவேரி மற்றும் பூஜா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது நடிகர் பிரபுவின் 200வது படமாகும் [1] 2015இல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2016இல் வெளி வந்ததுள்ளது[2]. நடிகர் கமல் ஹாசன் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
அண்ணாமலை தாயில்லாத தனது மகன் கார்த்திக்குடன் மலேசியாவில் ஒரு இந்திய உணவு விடுதியை நடத்தி வருகிறார். அவர் தனது மகன் மேல் மிகுந்த அன்பு கொண்டு எப்போதும் அருகிலேயே இருக்க விரும்புகிறார். ஆனால் , விளையாட்டுப் பிள்ளையான கார்த்திக்கோ தனது நண்பர்களுடனே நேரத்தை செலவிடுகிறான். கார்த்திக், பவித்ரா எனற பெண் மேல் காதல் கொள்கிறான். மாலா அண்ணாமலையின் சமையலை கண்டு அவரை நேசிக்கிறார். தன்னைவிட நண்பர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது கண்டு அண்ணாமலை கவலை கொள்கிறார். அவர்கள் ஒரு சாதுவை சந்திகின்றனர். அந்த சாது அவர்களின் ஆன்மாவை இருவருக்கும் இடமாற்றம் செய்கிறார். இப்போது அண்ணாமலை கல்லூரிக்கும் ,கார்த்திக் உணவு விடுதிக்கும் செல்கின்றனர். அண்ணாமலை கார்த்திக், பவித்ராவின் அன்பைப் புரிந்துகொள்கிறார் , அதேபோல உணவு விடுதியில் எதிர்கொள்ளும் பிரச்சனகளை கார்த்திக்கும் புரிந்து கொள்கிறான். முடிவில் கார்த்திக் அவனது தந்தையிடம் மன்னிப்பு கேட்க, பின்னர் இருவரும் ஆன்மாவை மாற்றிக் கொள்கின்றனர். முடிவில் கார்த்திக், பவித்ரா இருவரும் இணைகிறார்கள்.
இப்படத்தை துஷ்யந்த் ராம்குமார் தயாரிக்க, இயக்குநர் சுசீந்திரன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அமுதேஸ்வர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.[3][4][5][6][7]
இப்படத்தின் ஒலித்தொகுப்பை டி. இமான் மேற்கொண்டுள்ளார்.