மீன்பிடி படகு | |
---|---|
![]() | |
ஓவியர் | குஸ்தாவ் கோர்பெட் |
ஆண்டு | 1865 |
ஆக்கப் பொருள் | கித்தான் துணியில் எண்ணெய் வண்ணம் கொண்டு வரையப்பட்டது |
இடம் | பெருநகரக் கலை அருங்காட்சியகம், நியூயார்க்கு |
மீன்பிடி படகு (The Fishing Boat) 1865ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓவியர் குஸ்தாவ் கோர்பெட் வரைந்த ஓவியமாகும். கித்தான் துணியில் எண்ணெயில் வண்ணத்தில் வரையபடப்பட்ட இந்த ஓவியம், ட்ரூவில்லிக்கு அருகிலுள்ள பிரெஞ்சு கடற்கரையில் ஒரு கடற்கரை மீன்பிடி படகை சித்தரிக்கிறது. இது தற்போது நியூயார்க்கில் உள்ள பெருநகரக் கலை அருங்காட்சியத்தின் சேகரிப்பில் உள்ளது.
1865 இலையுதிர்காலத்தில் கோர்பெட் விரைவாகத் தயாரித்த 35 எண்ணெய் வண்ண ஓவியங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும். அந்தக் காலத்தின் பல கடல் ஓவியங்களைப் போலல்லாமல், இந்த ஓவியத்தில் படகானது ஒரு சிறிய உறுப்பாகக் காட்சிப்படுத்தப்படாமல் ஓவியத்தின் மைய அம்சமாக இருந்தது. மீன்பிடிப் படகு ஓவியம் 1899 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டபோது, மெட் சேகரிப்பில் நுழைந்த கோர்பெட்டின் முதல் படைப்பாக அமைந்தது. [1]