மு. இராமநாதன்

மு. இராமநாதன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1989
முன்னையவர்செ. அரங்கநாயகம்
தொகுதிகோயம்புத்தூர் மேற்கு
பதவியில்
1989–1991
பின்னவர்கே. செல்வராசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-06-22)22 சூன் 1933
கோயம்புத்தூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்அச்சுத்தொழில்

கோவை மு இராமநாதன் அல்லது மு. இராமநாதன் (M. Ramanathan) என்பவா் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற  உறுப்பினரும், மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 1971, 1984, 1989 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் கோயம்புத்தூர் மேற்கு தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்ற உறுப்பினாக பணியாற்றினார்.[1][2][3] மேலும் 1996 ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் திமுகவில் கோயம்புத்தூர் மாநகர் மாவட்டச் செயலாளர், தணிக்கைக்குழு உறுப்பினர், அறக்கட்டளை அறங்காவலர், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் 2019 மே 10 அன்று தன் 87ஆம் வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-23.
  2. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-23.
  3. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 110.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  4. "திமுக முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ. மு.ராமநாதன் காலமானார்". Archived from the original on 2019-05-11. Retrieved 2019-05-11.
  5. "திராவிட இயக்க பல்கலை. கழகம்...கோவை தென்றல் மு. ராமநாதன் காலமானார்!". செய்தி. ஒன் இந்தியா. 10 மே 2019. Retrieved 11 மே 2019.