முகமது எர்வான் Mohamad Ervan | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நாடு | இந்தோனேசியா | ||||||||||||||||||||||
பிறப்பு | மே 15, 1992 | ||||||||||||||||||||||
பட்டம் | பன்னாட்டு மாசுட்டர் (2019) | ||||||||||||||||||||||
உச்சத் தரவுகோள் | 2404 (மார்ச்சு 2023) | ||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
முகமது எர்வான் (Mohamad Ervan) இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர் ஆவார். 1992 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இவருக்கு 2019 ஆம் ஆண்டில் பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது. [1]
2018 ஆம் ஆண்டில் முகமது எர்வான் இந்தோனேசிய சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார். [2]
2021 ஆம் ஆண்டு ஆசிய தனிநபர் கலப்பு சதுரங்க வெற்றியாளர் போட்டியில் 36 ஆவது தரநிலையில் இருந்த இவர் ஆறாவது இடத்தைப் பிடித்த பிறகு, 2021 ஆம் ஆண்டு சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றார் [3] [4] அங்கு இவர் முதல் சுற்றில் நோடிர்பெக் அப்துசட்டோரோவுக்கு எதிராக சமன் செய்தார். இவர்களின் முதல் ஆட்டத்தில் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் இவர்களது இரண்டாவது ஆட்டத்திற்கு முன் கோவிட்-19 சோதனையில் தோல்வியடைந்தார். தனது எதிராளியிடம் சமனை ஒப்படைத்தார். [5]