முகமது சுர்தி Mohammed Surti | |
---|---|
குசராத்து சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 1980–1985 | |
முன்னையவர் | வியாசு போபட்லால் மூல்சங்கர் |
பின்னவர் | பாபுபாய் சோபரிவாலா |
தொகுதி | சூரத் மேற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
முகமது சுர்தி (Mohammed Surti) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். குசராத்து மாநிலத்தின் சூரத் நகரத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகவும், குசராத்து மாநில அமைச்சராக இருந்தவர். 1993 சூரத் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாக பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.[1]
அக்டோபர் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சூரத்தில் உள்ள தடா நீதிமன்றம் முகமது சுர்திக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. பின்னர் 18 ஜூலை 2014 ஆம் ஆண்டு 18 ஆம் தேதியன்று சுர்தி உட்பட 1993 சூரத் குண்டுவெடிப்புக்கு தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளையும் உச்ச நீதிமன்றம் விடுவித்தது.[2]