முகமது திசிர் Mohamed Tissir | |
---|---|
நாடு | மொரோக்கோ |
பிறப்பு | நவம்பர் 27, 1976 |
பட்டம் | பன்னாட்டு மாசுட்டர் (1999) |
உச்சத் தரவுகோள் | 2490 (அக்டோபர் 2006) |
முகமது திசிர் (Mohamed Tissir) மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1999 ஆம் ஆண்டில் இவருக்கு பன்னாட்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க சதுரங்க வெற்றியாளர் போட்டியையும் 1996, 1999 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் மொராக்கோ சதுரங்க வெற்றியாளர் போட்டியையும் முகமது திசிர் வென்றார், மேலும் பல சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் மொராக்கோ நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் பால்மா டி மல்லோர்காவின் 36 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் 1999 ஆம் ஆண்டில் இயோர்டானில் நடைபெற்ற அரபு விளையாட்டுகளிலும் வென்றார்.
2000 ஆம் ஆண்டில் சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் திசிர் விளையாடினார், அங்கு அவர் இடம்பெற்றிருந்த குழுவில் கடைசி இடத்தைப் பிடித்தார். 2004 ஆம் ஆண்டின் பிடே உலக சதுரங்கப் போட்டியிலும் திசிர் விளையாடினார். அங்கு இவர் முதல் சுற்றில் அலெக்சி திரீவ் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.[1]
சதுரங்கப் பயிற்சியாளராகவும் இவர் செயல்படுகிறார். 2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரில் நடைபெற்ற சதுரங்க உலக கோப்பை போட்டியிலும் இவர் விளையாடினார். .