புள்ளிவிபரம் | |
---|---|
செல்லப்பெயர் | பால்கன் |
பிரிவு |
|
உயரம் | 5 அடி 6 அங்குலம் |
நீட்ட தூரம் | 66+1/2 அங்குலம் |
பிறப்பு | 29 திசம்பர் 1989 |
பிறந்த இடம் | குவெட்டா, பாக்கித்தான் |
நிலை | பாரம்பரியப் பிரிவு |
குத்துச்சண்டைத் தரவுகள் | |
மொத்த சண்டைகள் | 14 |
வெற்றிகள் | 12 |
வீழ்த்தல் வெற்றிகள் | 8 |
தோல்விகள் | 2 |
முகம்மது வசீம் (Muhammad Waseem) என்பவர் 1987 ஆகஸ்ட் 29 அன்று பிறந்த [1] ஓர் பாக்கித்தானின் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஆவார். குத்துச்சண்டையில் இவர் விரைவாக சண்டையிடும் பாணியால் அறியப்பட்டார். இவருக்கு "பால்கான்" எனும் புனைப் பெயரும் உண்டு.
முகம்மது வசீம் 1987 ஆகஸ்ட் 29 அன்று பாக்கித்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பிறந்தார். இவரின் தந்தை அங்கே ஓர் அரசு ஊழியராக இருந்தார். இவரின் தாயும் பாக்கித்தானைச் சேர்ந்தவர்.
2012 ஆம் ஆண்டில், முகமது வசீம் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தில் தொழில்முறை வீரராக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இவரது பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவில்லை, அதற்கு இவர் இவ்வாறு கூறினார்;
“. . . என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. குத்துச் சண்டை கூட்டமைப்பு இந்த விஷயத்தை கையாண்டது. ஆனால் எந்த முடிவும் அவர்களிடமிருந்து வெளிவரவில்லை. இது உண்மையிலேயே எனக்கு ஏமாற்றமளிக்கிறது. நான் உலகின் சிறந்த குத்துச்சண்டை வீரராக விரும்பினேன். ஆனால் என் கனவு சிதைந்தது. . .” [2] முகமது வசீம் கடந்த ஆண்டு தனது ஐபிஎஃப் பட்டத்தினை வஞ்சித்துப் பெற்றார். தற்போது அவர் சமீபத்தில் எம்டிகே குளோபல் என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்த நிறுவனத்திற்காக தற்போது இவர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்தியாவின் புதுதில்லியில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பாக்கித்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலத்தையும் வென்றுள்ளார்.[3]
2009 ஆம் ஆண்டு தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள கிங்ஸ் கோப்பையில் முகம்மது வசீம் பலூச்சுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. காலிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரின் சலே முகமதுவை 26–6 என்ற கணக்கில் தோற்கடித்தார்.[4]
2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈரானின் மசூத் ரிகியை 32 வது சுற்றில் தோற்கடித்தார்.[5]
2010 இல் சீனாவில் நடைபெற்ற உலக காம்பாட் விளையாட்டின் இறுதிப் போட்டியில் டொமினிக்கன் குடியரசின் டகோபெர்டோ அகுவெரோவை [6] தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
2010 இல் துருக்கியின் இசுதான்புல்லில் நடைபெற்ற 4 வது சர்வதேச அக்மத் கோமர்ட் குத்துச்சண்டை போட்டியில் [7] வெண்கலப் பதக்கம் வென்றார் வசீம். காலிறுதியில், பலோச் தனது துருக்கிய வீரரான காக்டாஸ் யிகில்மாஸை 14–1 என்ற கணக்கில் வென்றார். ஆனால் அரையிறுதியில் வசீம் உக்ரேனிய குத்துச்சண்டை வீரர் ஒலெக்ஸாண்டர் கிரிஷ்சுக் என்பவரால் 8–2 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டதால் வெண்கலப் பதக்கத்தெயே வெல்ல முடிந்தது.[8][9][10]
முகம்மது வசீம் பலூச் 2010 ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற 11 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.[11] இறுதிப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில், சூரஞ்சோய் சிங் என்ற இந்திய வீரரால் தோற்கடிக்கப்பட்டார். முன்னதாக அரையிறுதியில், பூட்டானின் வீரரான கின்லிக்கு எதிரான போட்டியை முகம்மது வசீம் 12–5 என்ற கணக்கில் வென்றார்.[12]
2011 இல்இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 21 வது அதிபர் கோப்பையில் முகம்மது வசீம் பலூச் வெண்கலப் பதக்கம் பெற்றார். இவர் காலிறுதிக்கு முந்தையப் போட்டியில் ஈரானின் ரெசா கோர்ஸ்போரியை 22: 6 என்ற கணக்கில் தோற்கடித்தார். காலிறுதியில் இவர் சிங்கப்பூரின் முகமது கனூரி கமீத்தை [13] 16: 6 என்ற கணக்கில் தோற்கடித்தார். அரையிறுதியில், யப்பானின் கட்சுவாக்கி சூசாவால் 25:19 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டார்.[14][15][16]
2011 இல் இஸ்லாமாபாத்தில் நடந்த 2 வது சாகீத் பெனாசிர் பூட்டோ சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் முகம்மது வசீம் பலூச் தங்கப்பதக்கம் பெற்றார், மேலும் போட்டியின் சிறந்த குத்துச்சண்டை வீரராகவும் அறிவிக்கப்பட்டார். இறுதிப் போட்டியில் வசீம் தனது கென்ய போட்டியாளரான பென்சன் கிச்சாருவை 26–9 என்ற கணக்கில் தோற்கடித்தார்.[17][18]
இசுக்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் முகமது வசீம் பாக்கித்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். வசீம் ஃப்ளைவெயிட் பிரிவுக்கான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பாக்கித்தானின் குத்துச்சண்டை அணியின் ஒரே வீரர் ஆனார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மோலோனியுடன் நெருங்கிய போட்டிக்கு பின்னர் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வசீம் வெண்கலப் பதக்கம் வென்றார்.[19]
முகமது வசீம் பல தேசிய போட்டிகளில் வென்றுள்ளார். குறிப்பாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக பாக்கித்தான் குத்துச்சண்டையில் தோல்வியே காணாத வீரர் எனும் வரலாற்றை உருவாக்கினார். முகமது வசீம் 2010 முதல் 2015 வரை பாகித்தானை பிரதிநிதித்துவப்படுத்த உலகக் குத்துச்சண்டைத் தொடருக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் ஒவ்வொரு முறையும் பாக்கித்தான் குத்துச்சண்டை அமைப்பு மறுத்துவிட்டது.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: Cite uses generic title (help)