தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||
பிறப்பு | 1 சூன் 1998 | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | ||||||||||||||||
நிகழ்வு(கள்) | 400 மீட்டர் | ||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 45.36 | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
முகம்மது அச்மல் வாரியத்தோடி (Muhammad Ajmal Variyathodi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1998 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். 400 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராக இந்திய தடகள விளையாட்ட்டை பிரதிநிதித்துவப் படுத்தினார்.[1] 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4×400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். 2023 ஆம் ஆண்டு உலக தடகள வெற்றியாளர் போட்டியிலும் இவர் அதே 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் போட்டியில் பங்கேற்றார்.[3] தகுதிச் சுற்றில் 2:59.05 என்ற ஆசிய சாதனையைப் படைத்த பிறகு இறுதிப் போட்டிக்கு வந்தார். இறுதிப் போட்டியில் அந்த அணி 6 ஆவது இடத்தைப் பிடித்தது.[4]