![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முகம்மது யூசுப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | மொ யூ [1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 122) | பிப்ரவரி 26 1998 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | ஆகத்து 29 2010 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 152) | மார்ச்சு 28 1998 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | செப்டம்பர் 22 2010 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 10 2010 |
முகம்மது யூசுப் (Mohammad Yousuf, Urdu: محمد یوسف இவரின் முன்னாள் பெயர் யூசுப் யொஹானா Yousuf Youhana, یوسف یوحنا, பிறப்பு: ஆகத்து 27. 1974), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் மற்றும் தேர்வுப் போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவார். 1998 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பன்னாட்டு இருபது20, முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வலதுகை மட்டையாளர் ஆவார். பாக்கித்தானிய வீரர்களில் உள்ள் சில கிறிஸ்தவர்களில் ஒருவராவார். பின் இவர் இசுலாம் சமயத்திற்கு மாறினார்.[2][3] 2006 ஆம் ஆண்டில்தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 1,788 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். இவரின் மட்டையாட்ட 100 ஆக இருந்தது.[4]
மார்ச் 10, 2010 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக விளையாட தடை விதித்தது.[5] பின் இவர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும் , சக வீரர்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டதாலும் இவரை அணியிலிருந்து நீக்கியதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.[5]
அணியிலிருந்து நீக்கியதால் இவர் மார்ச் 29, 2010 இல் தனது ஓய்வினை அறிவித்தார்.[6] இருந்தபோதிலும் சூலை 2010 இல் நடைபெற இருந்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாட வருமாறு பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை அழைத்தது.[7]
பாக்கிஸ்தானின் பஞ்சாபின் லாகூரில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் யூசுப் பிறந்தார். அவரது தந்தை யூஹானா மசீ ரயில் நிலையத்தில் பணிபுரிந்தார்.இவர்களது குடும்பம் அருகிலுள்ள ரயில்வே காலனியில் வசித்து வந்தது. ஒரு சிறுவனாக இருக்கும் போது இவரால் ஒரு மட்டையை வாங்க இயலவில்லை.தனது 12 ஆம் வயதில், அவர் கோல்டன் ஜிம்கானாவில் இருந்தார். இவர் துடுப்பாட்ட வீரராக ஆவோம் என தனது இளமைப் பருவ காலங்களில் நினைத்தது இல்லை. அவர் லாகூரின் ஃபோர்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் சேர்ந்தார், 1994 இன் ஆரம்பத்தில் திடீரென கிறித்துவ மததினைக் கைவிடும் வரை தொடர்ந்து துடுப்பாட்டம் விளையாடினார். [8] .
முகம்மது யூசுப் டர்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.பின் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 9,000 ஓட்டங்களுக்கு மேல் ஒருநாள் போட்டிகளிலும், 7,000 ஓட்டங்களுக்கு மேல் தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளிலும் சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 40, தேர்வுப் போட்டிகளில் 50 சராசரியாக வைத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 24 நூறுகள் அடித்துள்ளார். 2002-2003 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 405 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தார். மேலும் 23 பந்துகளில் அரைநூறும், 68 பந்துகளில் 100 ஓட்டங்களையும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அடித்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 27 பந்துகளில் அரைநூறு ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் விரைவாக அரைநூறுகள் அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் பொக்சிங் நாள் அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 111 ஓட்டங்கள் எடுத்தார். டிசம்பர் , 2005 ஆம் ஆண்டில் லாகூரில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 223 ஓட்டங்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். சூலை 2006 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன் முதல் போட்டியில் 202 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் ஹெடிங்லீயில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 192 ஓட்டங்களும், ஓவலில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 128 ஓட்டங்களும் எட்டுத்தார்.
ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங், மேற்கிந்திய தீவுகள் பிரையன் லாரா, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு வீரரான மக்காயா என்டினி மற்றும் இலங்கையின் முத்தையா முரளிதரன் ஆகியோரை விட யூசுப் 2006 ஆம் ஆண்டிற்கான சிஎன்என்-ஐபிஎன் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த விசுடன் துடுப்பாட்ட வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [9] 2007 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி 'ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதினைப் பெற்றார். அவர் 10 போட்டிகளில் ஏழு நூறுகள் மற்றும் இரண்டு அரை நூறுக உட்பட 94.40 எனும் சராசரியில் 944 ஓட்டங்கள் எடுத்தார். இதர்கு முன் இந்த விருதினை கெவின் பீட்டர்சன் மற்றும் ஆஸ்திரேலிய மட்டையாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோர் பெற்றுள்ளனர். [10]
மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் வைத்திருந்த இரண்டு உலக சாதனைகளையும் இவர் முறியடித்தார்.யூசுப் 10 போட்டிகளில் 12 நூறுகள் உட்பட 1788 ஓட்டங்களை எடுத்து அந்தச் சாதனையினை முறியடித்தார். [11]
புள்ளிவிவரப்படி, 2006 ஆம் ஆண்டு துடுப்பாட்டத்தில் ஆஸ்திரேலியா, முத்தையா முரளிதரன் மற்றும் யூசுப் ஆண்டு ஆகியோரின் பொற்காலம் என்று கூறப்படுகிறது. 2006 இல் 99.33 எனும் சராசரியில் 1788 ஓட்டங்கள் எடுத்த யூசுப், விவ் ரிச்சர்ட்ஸின் இரண்டு உலக சாதனைகளையும் முறியடித்தார். [12]
2006 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 30, 2006 அன்று, கராச்சியில் பாகிஸ்தானுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இறுதி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் மூன்றாவது ஆட்டப் பகுதியின் போது, விவ் ரிச்சர்ட்ஸின் முப்பது ஆண்டு சாதனையை முறியடித்து, ஒரே ஆண்டில் தேர்வு போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார். [13] மூன்று தேர்வு கொண்ட தொடரில் பாகிஸ்தான் மட்டையாளர் அதிக ஓட்டங்கள் எடுத்த ஜாகீர் அப்பாஸின் சாதனையையும் அவர் முறியடித்தார். 1978/79 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அப்பாஸ் 583 ஓட்டங்கள் எடுத்தார். [14] யூசுப் 2006 இல் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்ட நூறுகளை எடுத்தார். இது ஒரே ஆண்டில் அதிக நூறுகள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். [15] ஆஸ்திரேலிய முன்னாள் மட்டையாளர் டொனால்ட் பிராட்மேன் வைத்திருந்த [16]
இருபது20 | ||||||||||||||
# | எதிரணி | போட்டிகள் | இன்னி | NO | ஓட்டங்கள் | அதிகம் | சராசரி | பி | ஸ்டிரைக் | 100s | 50s | 0 | 4s | 6s |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 3 | 0 | 50 | 26 | 16.66 | 43 | 116.27 | 0 | 0 | 0 | 5 | 1 |
மொத்தம் | 3 | 3 | 0 | 50 | 26 | 16.66 | 43 | 116.27 | 0 | 0 | 0 | 5 | 1 |