முகம்மது யூனுஸ் கான் (1916, ஜூன் 26 - 2001, ஜூன் 17) ஓர் இந்திய வெளியுறவு சேவையில் உறுப்பினராக இருந்தார்.[1] இவர் துருக்கி, இந்தோனேசியா, ஈராக் மற்றும் ஸ்பெயினுக்கான தூதராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவுக்கும் உலகின் மற்ற நாடுகளுக்குமான வர்த்தக உறவை வர்த்தக கண்காட்சிகள் மூலம் ஊக்குவித்தார். வர்த்தக கண்காட்சிக்கு என்று டெல்லியில் பிரகதி மைதானத்தில் கண்காட்சி வளாகத்தை நிறுவப்பட்டது.
இவர் இந்திய வர்த்தக கண்காட்சி ஆணையத்தின் தலைவராகவும் இருதுள்ளார். இந்த ஆணையம் தற்போது இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.
யூனுஸ் கானுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷனின் வழங்கப்பட்டுள்ளது.
யூனுஸ் 1916 ஆம் ஆண்டு ஜூன் 26, அன்று வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் ஆப்டாபாத் நகரில் பிறந்தார்.[1] இவரது பெற்றோர்கள் ஹாஜி குலாம் சம்தானி மற்றும் முர்வாரி ஜன் ஆவார். இவர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக பள்ளி மற்றும் பெஷாவர் இஸ்லாமியா கல்லூரியில் கல்வி பயின்றார்.
இவர் தனது 84 வயதில் (2001 ஆம் ஆண்டு ஜூன் 17) புது தில்லியின் எய்ம்ஸில் நீண்டகாலமாக இருந்த நோயால் இறந்தார்.[2]
யூனுஸ் கான் அப்துல் கஃபர் கானை பின்பற்றி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். யூனுஸ் இவருடன் 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 1947 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார் .[2] 1941 இல் வெளியேறு இந்தியா இயக்கத்தில் ஈடுப்பட்டதற்காக இஸ்கந்தர் மிர்சாவால் சிறையில் அடைக்கப்பட்டார். ஆப்டாபாத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டப்போது இவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் இவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று கருதிய பிரித்தானிய அரசாங்கம் 1944 இல் யூனுஸை விடுவித்தது. சற்று நோய் குணமடைந்த பின்னர் இவர் மீண்டும் 1946 இல் காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1947 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் இந்திய வெளியுறவு சேவையில் நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் 1948 ஆம் ஆண்டில் பிரிந்தார். இந்த அமைச்சகத்தில் பணியில் இருந்தப்போது லுசாக்கா, அல்ஜியர்ஸ், கொழும்பு, புது தில்லி, மற்றும் ஹராரே ஆகியநகரங்களில் நடந்த அணிசேரா இயக்கத்தின் உச்சிமாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
யூனுஸ் 1974 ஆம் ஆண்டு வர்த்தக அமைச்சகத்தின் செயலாளராக ஓய்வு பெற்றார்.
1975 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியின் வல்லமையை பயன்ப்படுத்தி இவர் டெல்லியில் பிரகதி மைதானத்தை நிறுவினார். இந்த மைதானத்தில் இந்திய தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் உள்ள நிறுவனக்களை அழைத்து வர்த்தக கண்காட்சிகளை நடத்தினார்.[3]
1989 ஜூன் மாதம் இவர் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[3]
இந்தியாவில் அவசரகாலத்தின் போது (1975-77), யூனுஸ் கான் இந்திரா காந்தியின் உள் வட்டத்தில் இருந்தார். மேலும் இந்திரா காந்தியின் மிகவும் நம்பகமான ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்தார்.
யூனுஸின் மகன் ஆதில் ஷாஹ்யார் ராஜீவ் காந்தி மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் காந்தியின் குழந்தை பருவ நண்பர். இதனை பயன்படுத்தி போபால் பேரழிவின் பின்னர் அமெரிக்க சிறையில் இருந்து இவரை விடுதலை செய்ய ராஜீவ் காந்தி உதவியதாக கூறப்படுகிறது.
ஆதில் ஷாஹ்யார் 1990 இல் இறந்தார்.[4]