முகவரி | |
---|---|
இயக்கம் | வி. இசட். துரை |
தயாரிப்பு |
|
கதை | பாலகுமரன் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம்[1] |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | நிக் ஆர்ட்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 19, 2000 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முகவரி (Mugavaree) என்பது 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று வி. இசட். துரை இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி காதல் திரைப்படம் ஆகும்.[2] இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.[3]
இந்த திரைப்படம் 19 பிப்ரவரி 2000 இல் வெளியிடப்பட்டது,[4] மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது,[5] சிறந்த குடும்பத் திரைப்படம் மற்றும் பிருந்தா, சிறந்த நடன இயக்குனருக்கான இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளை வென்றது.
இப்படத்தில் ஸ்ரீதர் (அஜித் குமார்) ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக ஆவதற்கான முயற்சியில் கடக்கும் லட்சியம், காதல் மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் முரண்பட்ட உணர்ச்சிகளைச் சுற்றியே கதை சுழல்கிறது.
முகவரி | |
---|---|
இசை
| |
வெளியீடு | 2000 |
இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் |
ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடல்கள் அமைந்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தேவா ஆவார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியவர்கள் | நீளம் | |||||||
1. | "ஏ! கீச்சு கிளியே" | ஹரிஹரன் | 6:22 | |||||||
2. | "ஏ நிலவே நிலவே" | உன்னிமேனன் | 4:13 | |||||||
3. | "ஓ நெஞ்சே" | ஹரிஹரன், சுவர்ணலதா | 5:54 | |||||||
4. | "ஆண்டே நூற்றாண்டே" | நவீன் | 7:15 | |||||||
5. | "பூ விரிஞ்சாச்சு" | உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | 5:48 |