முகாபட்டு | |
---|---|
![]() Muga silk mekhala and chador with jaapi | |
வகை | கைத்தறிப்ட்டு |
இடம் | அசாம் |
நாடு | இந்தியா |
பதிவுசெய்யப்பட்டது | 2007 |
பொருள் | பட்டு |
முகா பட்டு (Muga silk)[1] என்பது இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தில் இந்திய புவிசார் குறியீடு பெற்ற பட்டு வகைகளுள் ஒன்றாகும். இந்த பட்டானது நீண்ட ஆயுட்காலமும் மின்னும் பளபளப்பான இயற்கையான மஞ்சள் நிறம் கலந்த பொன்னிறமும் கொண்டது ஆகும். முற்காலத்தில் இப்பட்டானது அரசு காப்புரிமையுடைய பட்டாக திகழ்ந்து வந்தது[2].
பிரம்மபுத்திரா பள்ளத் தாக்கில் இப்பட்டுப்புழுக்கள் சோம் ( Machilus bombycina ) மற்றும் சுலா (Litsaea polyantha) போன்ற தாவரங்களின் இலைகளை உணவாக உட்கொள்ளும். இந்த முகாப்பட்டு தூய்மை செய்யப்பட்டபின் தேவையின் அடிப்படையில் சாயம் ஏற்றப்படுகிறது. இப்பட்டு ஒவ்வொரு முறையும் கையால் துவைக்கும்பொழுது ஒளிரும் தன்மை அதிகரிக்கும். இந்த முகாப்பட்டு அசாமின் பிற பட்டுகளைப் போல புடவை மற்றும் பாரம்பரிய உடையான மெகலாஸ் மற்றும் சார்டுஸ் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் பட்டுப்புழு வளர்ப்பு பண்டைய தொழில்களில் ஒன்று. இத்தொழில் எப்பொழுது தோன்றியது என்று கண்டறியப்படவில்லை. அகாம் மன்னர் ஆட்சி (1228–1826 ) காலத்தில் முகாப்பட்டு வகை காப்புரிமை பெற்று அசாம் மாநில மக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் ஒரு அங்கமாக வளர்ச்சி அடைந்தது. இம் முகாப்பட்டு இழையினால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அரச குடும்பங்களும் மற்றும் சீன உயர் அதிகாரிகளுக்கும் சிபாரிசு செய்யப்பட்டன. விளையுயர்ந்த பல வகையான முகாபட்டு இழையினால் ஆன பரிசுப்பொருட்களை அரசு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு அரசவைக்கு வருகைபுரியும் சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசாக வழங்கினார்கள். நெசவாளர்களுக்கு பயிற்சியளிப்பதில் அரசிகள் தனிப்பட்ட முறையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இப்பட்டானது ஹாம் மன்னர்கள் காலத்தில் ஒரு முதன்மை ஏற்றுமதி பொருளாக இருந்தது. முகா பட்டானது 2007 ஆம் ஆண்டு புவியியல் சார்ந்த குறியீடு (GI) என கருதப்பட்டன மற்றும் இதற்கு 2014 ஆம் ஆண்டு வணிகநோக்கத்திற்காக புவியியல் அடையாள சின்னம் வழங்கப்பட்டது. இச்சின்னம் அசாம் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கழகத்தில் பதிவுச்செய்யப்பட்டுள்ளது. முகா பட்டு பொருட்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டஅலுவலர்களுக்கு இந்திய மைய பட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஆய்வுச் செய்யப்பட்ட பட்டு பொருட்களை உற்பத்திசெய்பவர்களுக்கு புவியியல் அடையாளச்சின்னத்தைப்[3] பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த வாரியம் முகாப்பட்டு உட்பட அசாமில் உற்பத்திச்செய்யப்படும் அனைத்து வகை பட்டு வளச்சிக்கு அசாமிலுள்ள ஜோர்ஹாட் நிறுவனத்தின் உதவியுடன் மைய முகா இ எரி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2014–2015 ஆம் நிதி ஆண்டில் உற்பத்திச் செய்யப்பட்ட 158 டன் முகா பட்டில் 136 டன் அசாமில் உற்பத்திச் செய்யப்பட்டது. இந்தியாவின் மொத்த பட்டு உற்பத்தி 28708 டன் ஆகும்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)