முகேசு குமார்

நந்தநூரி முகேசு குமார் (Nandanoori Mukesh Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதியன்று ஆந்திரப்பிரதேச மாநிலம் ஐதராபாத்து நகரில் இவர் பிறந்தார்.[1] இந்திய ஆண்கள் வளைகோல் பந்தாட்ட அணியில் முகேசு குமார் விளையாடியுள்ளார்.

1992 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முகேசு இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்றார். முரளி என்ற சுருக்கப் பெயரால் இவர் அழைக்கப்பட்டார். எசுப்பானியாவிலுள்ள பார்சிலோனாவில் 1992 ஆம் ஆண்டு தொடங்கி அடுத்தடுத்த மூன்று கோடைக்கால ஒலிம்பிக் அணிகளில் இந்தியாவுக்காக விளையாட முகேசு தேர்ந்தெடுக்கப்பட்டார். பார்சிலோனாவில் இந்திய அணி ஏழாவது இடத்தைப் பிடித்தது.[2] இப்போட்டியில் முகேசு 4 கோல்கள் அடித்தார். 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளிலும், 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கிலும் இவர் இரண்டிரண்டு கோல்கள் அடித்தார். 307 பன்னாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய முகேசு மொத்தமாக 80 கோல்கள் அடித்துள்ளார்.

விருதுகள்

[தொகு]

இந்திய அரசாங்கம் முகேசுகுமாருக்கு 1995 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதையும்,[3] 2003 ஆம் ஆண்டு பத்மசிறீ விருதையும் வழங்கி சிறப்பித்துள்ளது.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

முகேசு குமார் வளைகோல் பந்தாட்ட வீராங்கனையான நித்தி குல்லரை மணந்து கொண்டார். இவர்களுக்கு என்.யாசாசுவினி மற்றும் அசுதோசு குமார் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mukesh Kumar Nandanoori". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016. பரணிடப்பட்டது 2012-12-14 at the வந்தவழி இயந்திரம்
  2. [1]
  3. sify.com
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

புற இனைப்புகள்

[தொகு]