Mukah Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | மலேசிய அரசாங்கம் (Government of Malaysia) | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் (Malaysia Airports Berhad) | ||||||||||
சேவை புரிவது | முக்கா, முக்கா பிரிவு, சரவாக், கிழக்கு மலேசியா) | ||||||||||
அமைவிடம் | முக்கா; சரவாக் | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 19.685 ft / 6 m | ||||||||||
ஆள்கூறுகள் | 02°52′55″N 112°02′36″E / 2.88194°N 112.04333°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2021) | |||||||||||
|
முக்கா வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: MKM[1], ஐசிஏஓ: WBGK); (ஆங்கிலம்: Mukah Airport; மலாய்: Lapangan Terbang Mukah) என்பது மலேசியா, சரவாக், முக்கா நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]
இந்த வானூர்தி நிலையம், சரவாக் மாநிலத்தின் முக்கா பிரிவு பகுதியில் வாழும் மக்களுக்கு வானூர்திச் சேவைகளை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.
பழைய சிறு தொலைவு வானூர்தி நிலையம் (Short Take-Off and Landing - STOL) 1960-களில் திறக்கப்பட்டது அப்போது அந்த நிலையம் ஒரே நேரத்தில் 67 பயணிகளை மட்டுமே கையாள முடிந்தது.[3][4] அதன் ஓடுபாதை 1,097 மீட்டர் நீளம் கொண்டு இருந்தது. 2020-இல், 29,011 பயணிகளையும் 3,150 விமான இயக்கங்களையும் கையாண்டது.
பழைய நிலையத்தில் அதன் கடைசி நாளான 16 ஜூன் 2021-இல் மிரிக்கு மதியம் 1.20 மணிக்கு புறப்பட்ட வானூர்திச் சேவையுடன் அதன் இயக்கம் ஒரு முடிவுக்கு வந்தது.
ஏப்ரல் 2009-இல், மலேசிய மத்திய அரசாங்கம் முக்காவில் ஒரு புதிய வானூர்தி நிலைய கட்டுமானத்திற்கு RM 436 மில்லியன் ஒதுக்கியது. கட்டுமானப் பணிகள் 2017-ஆம் ஆண்டு சூலை மாதம் தொடக்கப்பட்டன.[5]
2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, வானூர்தி நிலையத்தின் கட்டுமானச் செலவுத் தொகை RM 360 மில்லியன் என்று துணை சரவாக் முதல்வர் ஜேம்சு செமுட் மாசிங் (James Jemut Masing) அறிவித்தார். புதிய முக்கா வானூர்தி நிலையம் 17 ஜூன் 2021-ஆம் தேதி தன் செயல்பாட்டைத் தொடங்கியது.[6]
RM 360 மில்லியன் செலவிலான புதிய முக்கா வானூர்தி நிலையம் முக்கா நகரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் 285 ஏக்கர் (115 எக்டர்) நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. புதிய வானூர்தி நிலையம் 3,120 m2 (33,600 sq ft) கொண்ட வானூர்தி முனையக் கட்டடத்தைக் கொண்டது.[7]
தவிர ஓடுபாதை, போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் (Air Traffic Control Tower), அலுவலகங்கள், முக்கிய நபர்கள் கட்டடம் (VIP Building), தீயணைப்பு நிலையம் மற்றும் பயணிகள் காத்திருக்கும் கூடம் போன்ற வசதிகளைக் கொண்டு உள்ளது.
இந்தப் புதிய முக்கா வானூர்தி நிலையத்தில் 100 வாகனங்கள் நிறுத்துமிடங்கள், 20 வாடகை வாகனங்கள் நிறுத்துமிடங்கள், 20 உந்துருளிகள் நிறுத்துமிடங்கள், மற்றும் 2 பேருந்துகள் நிறுத்துமிடங்கள் உள்ளன. புதிய வானூர்தி நிலையம் ஆண்டுக்கு 264,000 பயணிகள் வரை கையாளும். மற்றும் தேவைப்பட்டால் பெரிய விமானங்கள் இறங்குவதற்கான நவீனத் தொழில்நுடப வசதிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.[8]
விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
மலேசியா எயர்லைன்சு நடத்துனர்: மாஸ் சுவிங்சு | பிந்துலு, கூச்சிங், மிரி, சிபு, தஞ்சோங் மானிசு |
ஆண்டு | பயணிகள் | வானூர்தி இயக்கங்கள் |
---|---|---|
2004 | 30,377 |
2,772
|
2005 | 31,807 |
2,846
|
2006 | 25,874 |
2,896
|
2007 | 20,908 |
2,378
|
2008 | 28,875 |
2,608
|
2009 | 34,979 |
2,932
|
2010 | 38,810 |
3,152
|
2011 | 37,450 |
3,258
|
2012 | 36,323 |
3,080
|
2013 | 34,247 |
2,996
|
2014 | 37,968 |
3,370
|
2015 | 35,935 |
3,258
|
2016 | 36,182 |
4,467
|
2017 | 37,148 |
4,234
|
2018 | 40,919 |
4,360
|
2019 | 47,557 |
4,318
|
2020 | 29,011 |
3,150
|
2021 | 17,387 |
1,694
|
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)