குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
மத்திய மற்றும் தென் தமிழகம் | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
இந்து |
முக்குலத்தோர் (Mukkulathor) அல்லது தேவர் (Thevar) எனப்படுவர்கள், இந்தியாவின், தமிழ்நாட்டில், மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் வாழுகின்ற இனக்குழுவினர் ஆவார். ஆனால் முக்குலத்தோர் என்னும் பெயரானது தமிழக அரசாங்கத்தால், இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
இவர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமூகத்தினர் ஆவர். தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்.[சான்று தேவை][1] ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து, அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள். அதில் சிலர் தமிழகத்திலிருந்து சத்தீசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.[சான்று தேவை]
முக்குலத்தோர் மற்றும் தேவர் என்ற சொற்கள் ஒத்ததாக பயன்படுத்தப்படுகின்றன. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் ஆர். முத்துலட்சுமியின் கூற்றுப்படி, தேவர் என்பது "தெய்வீக இயல்புடையவர்கள்" என்றும், முக்குலத்தோர் என்றால் "மூன்று குலங்கள் ஒன்றிணைந்தன" என்றும் பொருள் ஆகும்.
முக்குலத்தோர் சமூகங்கள் பெரும்பாலும் தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளான மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் வாழ்கின்றன. 1990களில் இருந்தே இவர்கள் பெண் சிசுக்கொலை செய்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.[2][3]
முக்குலத்தோர் கணிசமான அளவு நிலங்களை வைத்திருந்தாலும், சமூகவியலாளர் ஹ்யூகோ கோரிங்கே என்பவர் 2005 ஆம் ஆண்டு எழுதிய குறிப்பில் "இவர்களின் கல்வி மற்றும் பொருளாதார சாதனைகள் மிகக் குறைவு" என்று குறிப்பிட்டார். பலர் சிறு விவசாயிகளாகவும் மற்றும் விவசாயத் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.[4]
தமிழக அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், கள்ளர் மற்றும் அகமுடையார் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் மற்றும் மறவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் உள்ளனர்.[5] இந்திய நடுவண் அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், இந்த மூன்று சமூகத்தினரும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர்.[6]
1990களில் ஜெயலலிதா அரசாங்கத்தின் உறுப்பினர்கள், முதலமைச்சர் உட்பட முக்குலத்தோருக்கு ஆதரவளித்ததாக குற்றச்சாட்டுகளை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் காவல்துறை மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க பதவிகளைப் பெற்றனர். அந்த நேரத்தில் முக்குலத்தோர் சமூகம் மாநிலத்தில் பின்தங்கிய நிலையிலும், அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. ஆனால் தலித் சமூகங்கள் - குறிப்பாக, பள்ளர்கள் - பெருகிய முறையில் செல்வந்தர்களாகவும், அரசியலில் ஆர்வமுள்ளவர்களாகவும் மாறிக்கொண்டிருந்தனர். தலித்துகளின் முன்னேற்றம் மற்றும் உயர்வுகளால் தலித்களுக்கும், முக்குலத்தோர்களுடன் பல மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த மோதல்களில் பெரும்பாலும் காவல்துறையினரின் கூட்டு இருந்தது. தலித் ஆர்வலர்கள் என அழைக்கப்படுபவர்களை தடுத்து வைப்பது, மக்கள் மீது (குறிப்பாக பெண்கள்) தாக்குதல்கள் மற்றும் தலித் கிராமங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்வு ஆகியவற்றுக்கு உதவியது.[7]
முக்குலத்தோர்கள் ஆண்டுதோறும் உ. முத்துராமலிங்கம் தேவரின் (1908-1963) பிறப்பு மற்றும் இறப்பு நாட்களான அக்டோபர் மாதம், 30 ஆம் தேதி, தேவர் ஜெயந்தி விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க அரசியல்வாதியாக இருந்தார், தேவர் ஜெயந்தி என அழைக்கப்படும் இந்நிகழ்ச்சி, 1993 ஆம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்படுகிறது. முக்குலத்தோர்கள், முத்துராமலிங்கத் தேவரை ஒரு தெய்வமாகக் கருதுகிறார்கள். இந்த நேரத்திலிருந்தே ஜெயந்தி ஒரு சிறிய விவகாரமாக இருந்து கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
முக்குலத்தோர் - தலித் விரோதம் ஒருதலைப்பட்சமாக இருக்கவில்லை. தலித்துகளும் வன்முறைச் செயல்களைச் செய்தனர்.[8]
கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர்களின் மறவர் போர்ப்படை பிரதான போர்ப்படையாக இருந்தது, தேவர்களின் மறவர் படை கேரளத்து நாயர்களுடன் இணைந்து "தமிழ் படை பட்டாளம்" என்று நாயர்கள் சாதியின் துணை சாதியாக மருவினார்கள்.[9]