முங்காரு மலே | |
---|---|
இயக்கம் | யோகராஜ் பட் |
தயாரிப்பு | ஈ. கிருஷ்ணா |
கதை |
|
இசை | மனோ மூர்த்தி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எஸ். கிருஷ்ணா |
படத்தொகுப்பு | தீபு எஸ். குமார் |
கலையகம் | ஈ. கே. எண்டர்பிரைசஸ் |
விநியோகம் |
|
வெளியீடு | திசம்பர் 29, 2006 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
ஆக்கச்செலவு | ₹70 இலட்சம்[1] |
மொத்த வருவாய் | மதிப்பீடு.₹50–75 கோடி[note 1][1][3][4][6][7] |
முங்காரு மலே (Mungaru Male பருவமழைக்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பெய்யும் மழையைக் குறிக்க கன்னடத்தில் பயன்படுத்தும் சொல்) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய கன்னட காதல் திரைப்படமாகும். யோகராஜ் பட் இணைந்து எழுதி இயக்கிய இப்படத்தை ஈ. கிருஷ்ணப்பா தயாரித்ததார். இதில் கணேஷ், பூஜா காந்தி, அனந்த் நாக் ஆகியோர் நடித்தனர். இந்த படமானது கணேஷ், பூஜா காந்தி, இயக்குநர் யோகராஜ் பட், பாடலாசிரியர் ஜெயந்த் கைகினி, நடன இயக்குநர்கள் ஏ. ஹர்ஷா, இம்ரான் சர்தாரியா, இசையமைப்பாளர் மனோ மூர்த்தி ஆகியோரை கன்னடத் திரைப்படத் துறையில் புகழ்பெறவைத்து பலப்படுத்தியதாக நம்பப்படுகிறது. மேலும் பாலிவுட் பின்னணிப் பாடகர்கள் சோனு நிகம், குணால் காஞ்சாவாலா, உதித் நாராயண், சுனிதி சௌஹான், சிரேயா கோசல் ஆகியோர் கர்நாடகத்தில் பிரபலமாக காரணமாயிற்று.[7][8]
இந்தியாவில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து ஓடிய இந்தியாவின் முதல் திரைப்படம் (அனைத்து மொழிகளிலும்),[9][10] மேலும் மல்டிப்ளெக்ஸில் அதிக நேரம் ஓடிய திரைப்படம், கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது.[9][11] பெங்களூரு மிரர் கூற்றின்படி, 50 கோடி வசூலை தாண்டிய முதல் தென்னிந்திய படம் .இது ஆகும்.[12] தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் 865 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் படம் இதுவாகும்.[13] மேலும் இப்படம் ₹ 50[2][3]– 75 கோடி[4] ( ₹ 500-750 மில்லியன்). ₹67.5 கோடி (US$8.85 மில்லியன்) வசூலித்ததாக வருமான வரித்துறை குறிப்பிட்டு அந்த தொகைக்கு வரி கோரியது.[12] இது பிவிஆர் மல்டிப்ளெக்ஸில் 460 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.[12] மேலும் பிவிஆரில் ஓராண்டுக்கு மேல் ஓடிய படமாக இந்திய திரைப்படத் துறையில் தேசிய சாதனை படைத்தது.[1][14]
இது 2008 இல் தெலுங்கில் வானா என்ற பெயரிலும்,[15] 2008 இல் வங்காளியில் பிரீமர் கஹினி என்ற பெயரிலும்,[16] ஒடியாவில் ரோமியோ - தி லவர் பாய் [17] ஆகவும், 2017 இல் மராத்தியில் பிரேமய் நமஹா என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது . இப்படத்தின் தொடர்ச்சியாக 2016இல் முங்காரு மலே 2 வெளியிடப்பட்டது.[18]
பெங்களூரில் ஒரு வணிக வளாகத்தில் நந்தினியை (பூஜா காந்தி) சந்திக்கிறான் பிரீதம் (கணேஷ்). அவளது அழகில் மயங்கிய அவன் ஒரு பள்ளத்தில் விழ இருக்கும்போது நந்தினி அனுக்கு கை கொடுத்து காப்பாற்றுகிறாள். அப்போது அவளது இதய வடிவிலான கைக்கடிகாரம் அவனிடம் வந்துவிடுகிறது.
தொடர்ந்த சில சந்திப்புகளில் அவள்மீது காதல் கொள்கிறான். ஆனால் அவளுக்கு கௌதம் (திக்னத்) என்பவனுடன் ஏற்கனவே நிச்சயம் நடந்துள்ளது. மேலும் நந்தினியை ஜானு என்பவனும் பின்தொடர்ந்து வருகிறான். இவற்றை எல்லாம் கடந்து பிரீதமின் காதல் வென்றதா இல்லையா என்பதே கதையின் முடிவு.
முன்னதாக விளம்பரப் படங்களில் அறிமுகமான இயக்குநர் யோகராஜ் பட் , முங்காரு மலே கதைப் பணியில் பணிபுரியத் தொடங்கினார்.[20] அவர் இந்தக் கதையை புனீத் ராஜ்குமார் மற்றும் ரம்யாவிடம் கூற அவர்கள் அதை நிராகரித்தனர்.[21] நடிகர் கணேஷ் தயாரிப்பாளர் இ. கிருஷ்ணப்பாவுக்கு யோகராஜ் பட்டை அறிமுகப்படுத்தினார். அவர் படத்திற்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பீட்டளவில் பிரபலமில்லாத நடிகை பூஜா காந்தி நடித்தார்.
படத்தில் தோராயமாக 80% காட்சிகள் மழையில் படமாக்கப்பட்டது.[22] படப்பிடிப்பானது சக்லேஷ்பூர், மடிகேரி,[22] ஜோக் அருவி சாகரா,[22] கதக் ஆகிய இடங்களில் நடந்தது. ஒளிப்பதிவாளர் கிருஷ்ணா, படத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்தார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஒந்து ஒந்து சாரி" | குணால் காஞ்சாவாலா, பிரியா ஹிமேஷ் | 4:32 | |||||||
2. | "முங்காரு மலே" | சோனு நிகம் | 4:49 | |||||||
3. | "குனிது குனிது பாரே" | உதித் நாராயண், சுனிதி சௌஹான், ஸ்டீபன் | 4:30 | |||||||
4. | "அனிசுத்திதே" | சோனு நிகம் | 4:36 | |||||||
5. | "சுவ்வி சுவ்வாலி" | ஹேமந்த் குமார் | 4:38 | |||||||
6. | "இவனு கெலியானல்லா" | சிரேயா கோசல் | 3:47 | |||||||
7. | "ஆரலுத்திரு ஜீவாத கெளேயா" | சிரேயா கோசல் | 4:38 | |||||||
மொத்த நீளம்: |
31:30 |
இப்படமானது ₹70 லட்சம் (US$91,800) செலவில் தயாரிக்கப்பட்டது.[1] படமானது 300 நாட்கள் ₹ 50 கோடி (500 மில்லியன்) வசூலித்தது.[23][24] அதன்பிறகு படம் 865 நாட்கள் திரையரங்கில் ஒடியதன் முடிவில் ₹ 50[2][3]-75 கோடிக்கு[4] (₹ 500-750 மில்லியன்) வசூல் ஈட்டியது.[13][25] இந்த படம் கர்நாடகத்தில் 150 பிரதிகளுடன் வெளியிடப்பட்டது.[26] பெங்களூர் பிவிஆர் திரையரங்கில் ஓடி மல்டிப்ளெக்சில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.[27] கன்னடத் திரையுலக வரலாற்றில் 50 கோடி வசூலைத் தொட்ட முதல் கன்னடப் படம் இதுவாகும்.[1][12][28]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Cite uses generic title (help)