முஜீப் உர் ஏ. ஆர். ரகுமான் சத்ரன் (Mujeeb Ur Rahman Zadran ( பஷ்தூ: مجیب الرحمن ځدراڼ ) (பிறப்பு 28 மார்ச் 2001) ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர், இவர் ஆப்கானிஸ்தான் தேசிய துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார் .[1] 21 ஆம் நூற்றாண்டில் பிறந்து ஆப்கானித்தான் அணி சார்பாக சர்வதேச துடுப்பாட்டப் போடியில் விளையாடிய முதல் வீரர் இவர் ஆவார்.[2] சர்வதேச அறிமுகமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு,இவரின் 16 வயது மற்றும் 325 நாட்களில், ஒருநாள் சர்வதேச போட்டியில் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். இதன் மூலம் மிக இளம் வயதில் ஐந்து இலக்கினைக் கைப்பற்றிய சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[3] 2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தேர்வாகிய துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.[4] இவரது மாமா நூர் அலி சத்ரானும் ஆப்கானிஸ்தான் சர்வதேச துடுப்பாட்ட அணியின் வீரராக இருந்தவர் ஆவார்.
ஆகஸ்ட் 10, 2017 அன்று நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் ஸ்பீன் கர் பிராந்தியத்திற்காக இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[5] இவர் செப்டம்பர் 11, 2017 அன்று 2017 ஷ்பகீசா துடுப்பாட்ட லீக்கில் பூஸ்ட் டிஃபெண்டர் அணி சார்பாக இவர் இருபது20 அறிமுகமானார்.[6] நவம்பர் 2017 இல், இவர் 2017–18 பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவர் கொமிலா விக்டோரியன் அணி சார்பாக விளையாடுவதற்கு ஒப்பந்தமானார்[7]
ஜனவரி 2018 ஆம் ஆண்டில் இவரை 2018 ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வாங்கியது.[8][9] 8 ஏப்ரல் 2018 அன்று இவர் தனது முதல் போட்டியில் விளையாடினார். அப்போது இவருக்கு வயது 17 ஆண்டுகள் மற்றும் 11 நாட்கள் ஆகும். இதன்மூலம் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய இளைய துடுப்பாட்ட வீரர் சஎனும் பெருமை பெற்றார்.[10]
பிப்ரவரி 2019 இல், இங்கிலாந்தில் நடைபெறும் 2019 ஆம் ஆண்டிற்கான இருபது 20 பிளாஸ்ட் துடுப்பாட்ட போட்டியில் விளையாட மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்துடன் ஒப்பந்தமானார்.[11]
ஏப்ரல் 2019 இல், 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இவர் இடம் பெற்றார்.[12][13] உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தினை வெளிபடுத்தியதனைத் தொடர்ந்து, சர்வதேச துடுப்பாட்ட கவுன்சில் (ஐ.சி.சி) முஜீப்பை அணியின் உயரும் நட்சத்திரமாக அறிவித்தது.[14]
2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தேர்வாகிய துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.[15][16] இவர் 14 ஜூன் 2018 அன்று இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சர்பாக இவர் அறிமுகமானார்.[17] 21 ஆம் நூற்றாண்டில் பிறந்து ஆப்கானித்தான் அணி சார்பாக சர்வதேச துடுப்பாட்டப் போடியில் விளையாடிய முதல் வீரர் இவர் ஆவார்.
ஏப்ரல் 2019 இல், 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இவர் இடம் பெற்றார்.[12][13] உலகக் கோப்பையைத் தொடர்ந்து, சர்வதேச துடுப்பாட்ட கவுன்சில் (ஐ.சி.சி) முஜீப்பை அணியின் உயரும் நட்சத்திரமாக அறிவித்தது.[14]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)