முட்டை புர்ஜி (இந்தி - அண்டா புர்ஜி) | |
மாற்றுப் பெயர்கள் | அண்டா புர்ஜி, அண்டே கா ககினா |
---|---|
தொடங்கிய இடம் | இந்திய துணைக்கண்டம் |
முக்கிய சேர்பொருட்கள் | முட்டை, வெங்காயம், மிளகாய், மசாலா |
முட்டை புர்ஜி (Egg bhurji) என்பது அண்டா புர்ஜி அல்லது அண்டே கா ககினா என்றும் அழைக்கப்படுவது முட்டை பொரியல் வகை உணவாகும். இது ஒரு பிரபலமான தெருவோர உணவாகும். முட்டை பொரியல் காலை, மதியம் அல்லது இரவு என் எந்நேரமும் உண்ணப்படுகிறது. முட்டை புர்ஜி இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து உருவானது. இது சில சமயங்களில் பார்சி உணவான அகுரியுடன் ஒப்பிடப்படுகிறது. பார்சி உணவான அகுரி அல்லது அகூரி ஒரு சில வேறுபாடுகளுடன் முட்டை புர்ஜியை மிகவும் ஒத்ததாகக் காணப்படுகிறது. புர்ஜியைப் போலவே, அகுரியும் இஞ்சி, வெங்காயம் மற்றும் பிற மசாலாப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், புர்ஜி முட்டைகள் நீர்வற்றும் வரை சமைக்கப்படுகிறது. அதேசமயம் அகூரி முட்டைகள் நீர் வற்றும் வரை சமைக்கப்படுவதில்லை. வதக்கிய நறுக்கப்பட்ட வெங்காயம், மிளகாய் மற்றும் விருப்பமான மசாலாப் பொருட்களை முட்டையுடன் சேர்த்து இந்த உணவு தயாரிப்பதிலும் வித்தியாசம் உள்ளது.[1]
இந்தியா முழுவதும் நெடுஞ்சாலை உணவகங்கள், நிறுத்தங்கள் மற்றும் தெரு உணவுக் கடைகளில் புர்ஜியை பரிமாறப்படுகிறது. சில சமயங்களில் இது ரொட்டித் துண்டுகளுடன் பரிமாறப்படுகிறது.[2] தக்காளி, மிளகாய், வெங்காயம் மற்றும் நறுமணமுள்ள மசாலாப் பொருட்களுடன், இந்த துருவல் தயாரிக்கப்படும் இந்த முட்டை திருப்திகரமான உணர்வை உருவாக்குகின்றன. முட்டை புர்ஜி சூடான சப்பாத்தி, பராத்தா, அல்லது வெண்ணெய் தடவிய தோசையுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.