முதலாம் சாதுல்லா கான் Sa'adatullah Khan I | |||||
---|---|---|---|---|---|
ஆற்காடு நவாப் | |||||
ஆட்சி | 1710–1732 | ||||
முன்னிருந்தவர் | தாவுத் கான் பன்னி | ||||
பின்வந்தவர் | தோஸ்த் அலி கான் | ||||
| |||||
இறப்பு | 1732 ஆற்காடு |
முதலாம் சாதுல்லா கான் அல்லது சாதுல்லா கான் (Saadatullah Khan I) (r.1710 - 1732) என்பவர் ஓர் ஆற்காடு நவாப் ஆவார்.
முகமது சையது கர்நாடக பிரதேசத்தின் கடைசி முகலாய ஆளுநர் ஆவார். இவர் சாதுல்லா கான் என்ற பெயரில் ஆற்காடு நவாப்பாக நியமிக்கப்பட்டார்.[1] இவா் தனது தலைநகரை செஞ்சியிலிருந்து ஆற்காட்டிற்கு மாற்றினாா்.[2] இவா் தனக்கு முன்னிருந்தவர்களைப் போலவே, தெற்குப் பகுதியை தனது அதிகாரத்தைச் செலுத்தினார். இவா் நடத்திய போர்களின் மூலம் ஸ்ரீரங்கப்பட்டணம் வாயில்வரை சென்றது மட்டுமல்லாமல், அதன் ஆட்சியாளர்களிடம் "பேஷ்காஷ்" என்ற திரைப்பணத்தையும் பெற்றாா்.
1708 ஆம் ஆண்டில் கிழக்கு இந்தியா கம்பெனிக்கு குத்தகையக ஐந்து கிராமங்களை வழங்கினார். ஆனால் வருவாய் குறைவு காரணமாக 1711 ஆம் ஆண்டில் அந்தக் கிராமங்களை திரும்ப நவாப் கேட்டாா். ஆனால் இதை ஆங்கிலேயா்கள் எதிா்த்தது மட்டுமல்லாது போருக்காவும் தயாரானாா்கள். ஆனால் சாதுத்துல்லா கான் எழும்பூர், தண்டையார்பேட்டை மற்றும் புரசைவாக்கம் போன்ற பகுதிகளையும் கொடுக்கும் படி கோாினாா். ஆனால், நிறுவனத்தின் முக்கிய வணிகா்களான சுன்குராமா மற்றும் ராயாகம் பாபையாவின் மூலம் இந்த பிரச்சினை சுமூகமாக திா்க்கப்பட்டது.
முகலாய மன்னா் அவுரங்கசீப் இறந்த பிறகு, வலிமையான வாரிசு இல்லாததால், தில்லியின் கட்டுப்பாட்டை பலவீனப்படுத்தியது. மேலும் சாதுல்லா கானுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் அவரது சகோதரர் குலாம் அலி கானின் மகனான தோஸ்த் அலி கானை தன் வாாிசாக நியமித்துக் கொண்டாா். இவர் தக்கான நிசாமின் ஆதிக்கத்திற்கு கட்டுபடாமல், முகலாய பேரரசரின் தனிப்பட்ட ஒப்புதலையும் பெற்றார்.
நவாபின் மீது நிசாமின் மேலாதிக்கம் தொடா்ந்தாலும், அவருடைய பலவினம், கருநாடக பகுதியில் நவாபின் அதிகாரத்தை பரம்பரையாக மாற்றுவதைத் தடுக்க முடியவில்லை. எனவே அவர் தனது நியமனம் தொடர்பாக முறையான அங்கீகாரத்தை வழங்குவதற்கு உரிமையைக் கோரினாா். இவ்வாறு சதாதுல்லா கானின் ஆதிக்கமானது தெற்கில் திருவாங்கூர் வடகில் இருந்த நாராயண நதிவரையில் இருந்து அதாவது கிழக்கு தொடா்ச்சி மலைகளில் இருந்து கிழக்கில் கடலுக்கு இடையே உள்ள கருநாடக பகுதியில் தன்னாட்சி மற்றும் சுதந்திர பெற்ற ஆட்சியாளராக மாறினாா்.
1717 ஆம் ஆண்டில் திருவொற்றியூர், சத்துங்காடு, காதிகாக்கம், வைசர்படி மற்றும் நூங்கம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு ஆளுநர்களை நியமித்தாா்.