முதலாம் புர்கான் நிசாம் ஷா

முதலாம் புர்கான் நிஜாம் ஷா
அகமதுநகரின் சுல்தான்
ஆட்சி1509–1553
முன்னிருந்தவர்முதலாம் மாலிக் அகமது ஷா
பின்வந்தவர்முதலாம் உசைன் ஷா
துணைவர்பிபி அமினா
பிபி மரியம்
மரபுநிசாம் சாகி வம்சம்
தந்தைமுதலாம் மாலிக் அகமது ஷா
பிறப்பு1502 (1502)
இறப்பு1553 (அகவை 50–51)
சமயம்சியா இசுலாம்

முதலாம் புர்கான் நிசாம் ஷா (Burhan Nizam Shah I) மத்திய இந்தியாவில் உள்ள அகமதுநகர் சுல்தானகத்தின் ஆட்சியாளராக இருந்தார். நிசாம் சாகி வம்சத்தின்[1] மாலிக் அகமது தனது பெயராய் அகமதுநகரை நிறுவி அதனை தமது சுல்தானகத்தின் தலைநகராகக் கொண்டார்.[2] [3]

தனது ஏழு வயதாக இருந்தபோது புர்கான் 1508[3] அல்லது 1510 இல்[4] தனது தந்தை முதலாம் அகமது நிசாம் ஷா இறந்தவுடன் அரியணை ஏறினார். [5] இவர் 1553 இல் இறந்தார் . இவருக்குப் பின் முதலாம் உசைன் நிசாம் ஷா ஆட்சிக்கு வந்தார்.

இவர் சியா இசுலாமுக்கு மாறினார். அரச குடும்பத்தாரும், பொது மக்களும் இதைப் பின்பற்றினர். சன்னி இறையியலாளர்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் இதை எதிர்த்தனர். ஆனால் நசுக்கப்பட்டனர்.[6] இவரது ஆட்சி மத சகிப்புத்தன்மை, கலை மற்றும் செழிப்பான வர்த்தகத்தால் வகைப்படுத்தப்பட்டது. முகலாயர்கள், பிஜப்பூர் மற்றும் பல்வேறு சிறிய மாநிலங்களுடனான மோதல்கள் இவரது ஆட்சியில் தொடர்ந்தன. அகமதுநகர் நகருக்கு தென்கிழக்கே இரண்டு மைல் தொலைவில் இவரது நினைவாக ஒரு அரண்மனைக் கட்டப்பட்டது. இது இப்போது இடிபாடுகளுடன் காணப்படுகிறது.[5]

குடும்பம்

[தொகு]

புர்கான் நிசாம் ஷாவுக்கு பீபி அமினா. பீபி மரியம் என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர். பிஜப்பூர் இவருக்கு ஆறு மகன்கள் இருந்தனர்: [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nizam Shāhī dynasty
  2. Nizam Shāhī dynasty
  3. 3.0 3.1 Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  4. "New Page 1". Archived from the original on 6 January 2009. பார்க்கப்பட்ட நாள் 21 January 2009.
  5. 5.0 5.1 "New Page 1". பார்க்கப்பட்ட நாள் 21 January 2009.
  6. Radhey Shyam (1966). "Burhan Nizam Shah I". The Kingdom of Ahmadnagar. Motilal Banarsidass. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120826519.
  7. D. D. Nagarkar, Glimpses of Ahmednagar (1977), p. 10