முதலாம் ருத்ரதாமன் | |
---|---|
மேற்கு சத்ரபதி | |
![]() கிரேக்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட முதலாம் ருத்ரதாமனின் நாணயம், பிரித்தானிய அருங்காட்சியகம் | |
ஆட்சி | கி பி 130–150 |
முதலாம் ருத்திரதாமன் (ஆட்சிக் காலம்:130–150), மேற்கு இந்தியாவை ஆண்ட மகா சத்திரபதி ஆவார். இவர் சகர்கள் இனத்தை சேர்ந்த மேற்கு சத்ரபதி பேரரசர் சஸ்தானவின் பேரன் ஆவார்.[1]சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்கு முதலாம் ருத்திரதாமன் காரணமானார்.
சக குலத்தைச் சேர்ந்த முதலாம் ருத்தரதாமன், தன்னை மகா சத்திரபதியாக அறிவித்துக் கொண்டு, பரத கண்டத்தின் மேற்கு பகுதிகளை கி பி130–150 முடிய ஆண்டவர். இவர் ஒரு இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, தானும் இந்து சமயத்தவராக மாறியவர்.[2][3]
முதலாம் ருத்திரதாமன் சாதவாகனர்களுடன் திருமண உறவுகள் கொண்டிருந்தான். தன் மருமகனான வசிஷ்டிபுத்திர சதகர்ணிக்கு திருமணப் பரிசாக, அபராந்தா எனும் நிலப்பரப்பை வழங்கினான்.
ருத்திரதாமன் தற்கால அரியானாவின் யௌதேயர்களை வென்றதாக கிர்நார் மலைக் கல்வெட்டுகள் கூறுகிறது.[4]
கிபி 150 காலத்திய முதலாம் ருத்திரதாமனின் ஜுனாகத் சமசுகிருத மொழி கல்வெட்டு மூலம்[5] அவர் இந்துப் பண்பாடு, கலை மற்றும் சமஸ்கிருத மொழிக்கு அளித்த ஆதரவு தெரியவருகிறது. credits Rudradāman I with supporting the cultural arts and Sanskrit
கிரேக்க எழுத்தாளர் யவனஸ்வரர் கிரேக்கத்திலிருந்து சமஸ்கிருதத்திற்கு யவன ஜாதகா நூலை மொழி பெயர்த்தபோது, ஆட்சி செய்த அரசர் என்றும் ருத்ரதாமன் என அறியப்படுகிறார். இது இந்தியாவில் ஜோதிடத்தின் மீது தாக்கம் செய்தது. ருத்ரதாமன் உஜ்ஜயினியிலிருந்து ஆட்சி செய்ததாக நம்புகிறார்கள்.
போர்க் குணம் கொண்ட யௌதேயர்களாலும், நாகர் இனத்தவர்களாலும், ருத்தரதாமனின் பேரரசு வீழ்ச்சி காணத் தொடங்கியது.
{{cite book}}
: Cite has empty unknown parameters: |coauthors=
and |month=
(help)