மானிடவியல் நோக்கில் முதல் தொடர்பு என்பது முன்பின் பார்த்திராத இரு வேறு இனக்குழுவினர் முதன்முதலாக சந்தித்துக் கொள்ளும் நிகழ்வாகும்.[1][2]
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, எசுப்பானியா கடலோடிகளுக்கும், கரிபியன் தீவுகளின் அரவாக் பழங்குடி மக்களுக்கும் முதன்முதலாக 1492ஆம் ஆண்டில் முதல் தொடர்பு ஏற்பட்டது. இந்த இரு இனக்குழுவினர் இதற்கு முன் சந்தித்துக் கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பியர்கள், சிட்னி பகுதியில் முதன்முதலாக 1788ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியப் பூர்வகுடியினர்களுடன் முதல் தொடர்பு கொண்டனர்.
ஆண்டு | பூர்வ குடிமக்கள் | முதலில் கண்டவர் | நாடு | பார்த்த இடம் | முதல் தொடர்பு பற்றிய விளக்கம் |
---|---|---|---|---|---|
~1000 | பயோதுக் (கனடா) | லீப் எரிக்சன் | வைக்கிங் | ஆக்ஸ் புல்வெளி, வின்லாண்ட் (தற்கால கனடா) | கிபி 1000ல் வைக்கிங்குகள் தங்களது குடியிருப்புகளை ஆக்ஸ் புல்வெளிகளில் நிறுவினர். |
12 அக்டோபர் 1492 | தைனோ மக்கள், கலிபி மக்கள் | கிறித்தோபர் கொலம்பசு | எசுப்பானியப் பேரரசு | பகாமாஸ் மற்றும் கியூபா | கிறித்தோபர் கொலம்பஸ் மற்றும் அவன் படையினரின் வன்முறை வெறியாட்டத்தால் ஆயிரக்கணக்கான பூர்வ மக்களின் உயிர் பலியானது. .[3] |
21 சூலை 1595 | பொலினீசியா | அல்வரோ டி மென்தானா டி நெய்ரா (Álvaro de Mendaña de Neira) | எசுப்பானியப் பேரரசு | மார்க்கெசசுத் தீவுகள், பிரெஞ்சு பொலினீசியா | துவக்கத்தில் நட்புடன் பழகினார்கள். பின்னர் முதல் ஏற்பட்ட வன்முறையில் பூர்வகுடிமக்கள் உட்பட 200 பேர் பலியானர்கள்.[4] |
19 டிசம்பர் 1642 | காதி துமதகோகிரி | அபேல் தஸ்மென் | டச்சு கடலோடிகள் | தாஸ்மான் மாவட்டம், நியூசிலாந்து | நான்கு டச்சு கடலோடிகள் கொல்லப்பட்டனர். ஒரு பூர்வ குடியின மாவோரி காயமடைந்தார்.[5] |
21 சனவரி 1788 | சாடிகள் மற்றும் பிஜ்ஜிகள் | பிரித்தானிய கடலோடிகள் | பெரிய பிரித்தானியா | சிட்னி, ஆஸ்திரேலியா | ஆஸ்திரேலியா பூர்வ குடிமக்களை அடித்தனர்.[6] |
29 நவம்பர் 1791 | மாவோரி | வில்லியம் ஆர். புரௌட்டன் | பெரிய பிரித்தானியா | சதாம் தீவுகள், நியூசிலாந்து | வன்முறையில் ஒரு மாவோரி பூர்வ குடிமகன் இறந்தார்.[7] |
1930 | பப்புவா மக்கள் | மிக் லெகி | ஆஸ்திரேலியா | பப்புவா நியூ கினி மேட்டு நிலம் | முதலில் நட்புடன் பழகிய பூர்வ குடிமக்கள், பின்னர் மிக் லெகியின் மற்றும் அவருடன் வந்தவர்களின் வெள்ளைத் தோலை பிராண்டினர்..[8] |