முதுகுப்புற கிளை | |
---|---|
![]() | |
![]() மனித உடலில் தண்டுவட நரம்பின் பின்புற கிளை பரவல் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | ramus posterior nervi spinalis |
TA98 | A14.2.00.035 |
TA2 | 6151 |
FMA | 5983 |
உடற்கூற்றியல் |
முதுகுப்புற கிளை (அல்லது பின்புற கிளை) (இலத்தீன்-Dorsal ramus) தண்டுவட நரம்புகளின் முதன்மை கிளைகளில் பின்புற கிளையாகும்.[1] தண்டுவட நரம்புகளின் இரு முதன்மை பிரிவகள் முதுகுப்புற கிளை மற்றும் வயிற்றுப்புற கிளை ஆகும். தண்டுவட நரம்பின் முதுகுப்புற கிளை உடலின் பின்புற பகுதிக்கு (தோல் மற்றும் தசைகள்) நரம்புகளை வழங்குகிறது.[2]
பின்புற மற்றும் வயிற்றுப்புற நரம்பு வேர் இணைந்து உருவான தண்டுவட நரம்புகள் இரு முதன்மை பிரிவுகளாக பிரிகிறது. இதில் பின்புற முதன்மை பிரிவான முதுகுப்புற கிளை உலலின் பின்புறப் பகுதியில் தோல், தசைகளுக்கு நரம்புகளை வழங்குகிறது. எனவே உடலின் பின்புற பகுதியின் உடல உணர்வுகள் மற்றும் உடல இயக்கு விசைகளை கட்டுப்படுத்துகிறது. தண்டுவட நரம்பு மற்றும் அதன் இரு முதன்மை பிரிவுகள் இரண்டும் கலப்பு நரம்புகள் ஆகும்.