முதுகெலும்பு விலங்கியல் (Vertebrate zoology) என்பது முதுகெலும்புள்ள விலங்குகளைக் குறித்து விவரிக்கும் ஓர் உயிரியல் பிரிவாகும். மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள் போன்ற முதுகெலும்புள்ள விலங்குகள் இப்பிரிவில் ஆராயப்படுகின்றன.
பல இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்களில் முதுகெலும்பு விலங்கியல் என்ற துறைகள் உள்ளன. சில இடங்களில் முழு அருங்காட்சியகங்களும் இந்த பெயரைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பெர்க்லி நகர கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள முதுகெலும்பு விலங்கியல் அருங்காட்சியகம் இதற்கு ஓர் உதாரணமாகும்.[1]
முதுகெலும்பு விலங்கியல் என்ற இத்துணைப்பிரிவில் மேலும் பல உட்பிரிவுகள் உள்ளன:
இத்துணைப்பிரிவுகளும் கூட சில குறிப்பிட்ட இனத்திற்கென மேலும் உட்பிரிவுகளாகப் பிரித்து ஆராயப்படுகின்றன.