முத்து கிருஷ்ண மணி (Muthu Krishna Mani) என்பவர் இந்திய சிறுநீரகவியலின் முன்னோடி மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் ஆவார்.[1] இவர் சென்னைஅப்போலோ மருத்துவமனை சிறுநீரகவியல் துறையின் முன்னாள் மேனாள் தலைவர் ஆவார்.[2] பீகாரைச் சார்ந்த இந்தியச் சுதந்திரப்போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயணன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டபோது சிகிச்சையளித்து மிகவும் பிரபலமானவர்.[3] இவருக்கு இந்திய அரசு 1991ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன்களுக்கான விருதான பத்ம பூசண் விருதினை வழங்கியது.[4] இவர் தன்வந்தரி விருது (2011)[5] மற்றும் ரவீந்திரநாத் தாகூர் விருதையும் பெற்றுள்ளார்.[6] இவர் 125க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இந்திய சிறுநீரகவியலாளர் சமூக (தெற்கு அத்தியாயம் - ஐ.எஸ்.என்.எஸ்.சி) 2018 டாக்டர் பத்ரோஸ் மத்தாய் நினைவு சொற்பொழிவு இவரின் குறிப்பிடத்தக்கச் சொற்பொழிவாகும்.[7]