முத்துகன் | |
---|---|
இறப்பு | பாமியான் |
குழந்தைகளின் பெயர்கள் | எசுந்தோவா காரா ஹுலேகு புரி |
மரபு | போர்சிசின் |
தந்தை | சகதை கான் |
முத்துகன் என்பவர் சகதை கானின் மூத்த மகனாவார். அவர் வழியாக மங்கோலியப் பேரரசை நிறுவிய ககான் செங்கிஸ் கானின் பேரன் ஆவார். 1221ஆம் ஆண்டு பாமியான் முற்றுகையின் போது முத்துகன் கொல்லப்பட்டார். இவரது மகன் எசுந்தோவா. எசுந்தோவா சகதை கானரசின் கானாகிய பரக்கின் தந்தையாவார். 1266-1271 ஆகிய காலகட்டத்தில் மொகுலிசுதானின் கானாகப் பரக் பதவி வகித்தார்.[1][2]
பாபர் தான் எழுதிய பாபர் நாமாவின் 19 வது பக்கத்தில் முதல் அத்தியாயத்தில் தனது தாய் வழி தாத்தா யூனஸ் கானின் பரம்பரையைப் பின்வருமாறு விளக்குகிறார்:
"யூனஸ் கான் சகதை கானின் வழித்தோன்றல், சகதை கான் செங்கிஸ் கானின் இரண்டாவது மகன் (பின்வருமாறு,) யூனஸ் கான், வயிஸ் கானின் மகன், வயிஸ் கான் ஷெர்-அலி அவுக்லோனின் மகன், ஷெர்-அலி அவுக்லோன் முகம்மத் கானின் மகன், முகம்மத் கான் கிசிர் கவாஜா கானின் மகன், கிசிர் கவாஜா கான் துக்லுக்-திமுர் கானின் மகன், துக்லுக்-திமுர் கான் ஐசன்-புகா கானின் மகன், ஐசன்-புகா கான் தவா கானின் மகன், தவா கான் பரக் கானின் மகன், பரக் கான் எசுந்தவா கானின் மகன், எசுந்தவா கான் முவத்துகனின் மகன், முவத்துகன் சகதை கானின் மகன், சகதை கான் செங்கிஸ் கானின் மகன்"[1]
|
|
|