இனங்காட்டிகள் | |
---|---|
12526-08-8 | |
பண்புகள் | |
Te3Cl2 | |
வாய்ப்பாட்டு எடை | 453.71 கி/மோல் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
முத்தெல்லூரியம் இருகுளோரைடு (Tritellurium dichloride) என்பது Te3Cl2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தெலூரியத்தின் நிலைப்புத்தன்மை கொண்ட குளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும்.
சாம்பல் நிறத்துடன் இரு திண்மமாக Te3Cl2 காணப்படுகிறது. ஒவ்வொரு மூன்றாவது தெலூரியம் மையமும் இரண்டு குளோரைடு ஈனிகளைக் கொண்டு திரும்பும் அலகுகளால் ஆன தெலூரியம் அணுக்களின் நீண்ட சங்கிலிக் கட்டமைப்பை இச்சேர்மம் பெற்றுள்ளது[1].முத்தெல்லூரியம் இருகுளோரைடானது பட்டை இடைவெளி 1.52 எலக்ட்ரான் வோல்ட் கொண்டுள்ள ஒரு குறை கடத்தியுமாகும் . தனிமநிலை தெலூரியத்தின் பட்டை இடைவெளி 0.34 எல்க்ட்ரான் வோல்ட் என்பதைவிட இது அதிகமாகும். தெலூரியத்துடன் விகிதவியல் அளவின்படி குளோரின் சேர்த்து இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம்[2]
மஞ்சள் நிறத்தில் நீர்மமாக இருக்கும் Te2Cl2 சேர்மத்தை இலித்தியம் பாலிதெலூரைடு மற்றும் TeCl4 சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம். Te2Cl ஒரு சிற்றுறுதி நிலைப்புத் தன்மையுடன் கூடிய திண்ம நிலையில் உள்ள பலபடியாகும். இச்சேர்மத்தில் இருந்து Te3Cl2 மற்றும் TeCl4[3] ஆகியனவற்றைத் தயாரிக்கலாம். விகிதச்சமமாதலின்றி பிரிகை அடைவதாலும் நிலைப்புத்தன்மையற்று இருப்பதாலும் தெலூரியம் இருகுளோரைடை தனித்துப் பிரிக்க இயலுவதில்லை. ஆனால், TeCl4 மற்றும் சூடான தெலூரியம் ஆகியவற்றுடன் உருவாகும் ஆவியில் முக்கிய கூறாக இது காணப்படுகிறது[4].