முத்தையா ஸ்தபதி | |
---|---|
பிறப்பு | முத்தையா முத்து ஸ்தபதி 14 திசம்பர் 1941 இலவன்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | சிற்பி மரபார்ந்த கட்டிடக்கலைஞர் |
அறியப்படுவது | இந்து கோவில் கட்டிடக்கலை |
பெற்றோர் | முத்து ஸ்தபதி கௌரி |
பிள்ளைகள் | 2 மகன்கள்,3 மகள்கள் |
விருதுகள் | பத்மசிறீ |
முத்தையா ஸ்தபதி ஒரு இந்திய சிற்பி, கட்டிடக் கலைஞர் மற்றும் இந்து கோவில் கட்டிடக்கலைஞர் ஆவார். மினசோட்டாவின் இந்துக் கோவில் உட்பட இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள பல கோவில்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். [1] இலங்கையில் உள்ள ரம்பதகல்ல வித்யாசாகர் கோவிலில் (Rambadagalla Vidyasagara Temple) 67.5 அடி உயர புத்தர் சிலையை உருவாக்கியவர் இவரே. அமர்ந்த நிலையில் (சமாதி) உள்ள உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை இது என்று கூறப்படுகிறது. [2] இந்திய அரசு அவருக்கு 1992 ஆம் ஆண்டிற்கான நான்காவது உயரிய பொதுத்துறை சார்ந்தவர்களுக்கான விருதான பத்மசிறீ விருதை வழங்கியது [3] .
முத்தையா 1941 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கோவில் நகரமான இராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள இராமநாதபுரம் மாவட்டம் இலவன்கோட்டை என்ற சிறிய கிராமத்தில் ஒரு மரபார்ந்த கட்டிடக் கலைஞரான முத்து ஸ்தபதி மற்றும் அவரது மனைவி கௌரி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். [4] அவர் தனது சகாக்களிடமிருந்து மரபார்ந்த வழியில் கட்டிடம் மற்றும் சிற்பக் கலையைக் கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், 1957 முதல் 1961 வரை மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் கோவில் கட்டிடக்கலை, சிற்பம் மற்றும் நகர திட்டமிடல் [5] ஆகிய துறைகளில் முறையான பயிற்சியைப் பெற்றார்.
முத்தையாவுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர், இருவரும் பாரம்பரிய கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிற்பிகள். அவரது மூத்த சகோதரர் எஸ்.எம்.கணபதி ஸ்தபதி, ஒரு ஸ்தபதி மற்றும் பத்மசிறீ விருது பெற்றவர். [6]
அவர் உலகெங்கிலும் உள்ள இந்து கோவில்களை வடிவமைத்து கட்டியுள்ளார், அவற்றில் 32 கோவில்கள் அமெரிக்காவிலேயே அமைந்துள்ளன. [1] இலண்டனில் உள்ள லட்சுமி நாராயண அறக்கட்டளைக்கான சிறீ மகாலட்சுமி கோவில், [7] மினசோட்டா இந்து கோவில், அறுபடை வீடு கோவில் வளாகம், சென்னை, சிறீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், உத்தரசுவாமி மலை, புது தில்லி, சிறீ உத்தர சிதம்பர நடராசர் கோவில், சதாரா மற்றும் ஊஸ்டன் (Houston), லாசு ஏஞ்சல்சுவில் உள்ள கோவில்கள், சிகாகோ, சான் பிரான்சிசுகோ, பிட்சுபர்க், நாசுவில்லி, பாசுடன், அட்லாண்டா, நியூயார்க், மவுண்ட்சுவில்லி, லூயிவில், மியாமி, ஓக்லஹோமா, மெம்பிஸ், டல்லாசு மற்றும் போக்கீப்சி ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க கட்டுமானங்களில் சில. [1]
கொல்கத்தாவில் உள்ள பிர்லா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் (Birla Industrial & Technological Museum) உள்ள 60 அடி சிறீ கிருட்டிணரின் கருங்கற் சிலையை வடித்த சிற்பியும் இவரே. 30 ஏப்ரல் 2015 ஆம் தேதியன்று, அவரது மற்றொரு பெரிய படைப்பான, 67.5 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை இலங்கையில் உள்ள ரம்பதகல்ல வித்யாசாகர் கோவிலில் திறக்கப்பட்டது. 7.5 அடி பீடத்துடன் கூடிய இந்த சிலை மொத்தம் 75 அடி உயரம் கொண்டது. உலகின் மிகப்பெரிய புத்தர் சமாதி நிலை சிற்பமாக இது கருதப்படுகிறது. [8] சென்னை, நங்கநல்லூரில் உள்ள 32 அடி அனுமன் சிலையும், காஞ்சிபுரத்தில் உள்ள ஏனாத்தூரில் உள்ள சங்கராச்சாரியார் சிலையும் இவர் உருவாக்கியவை ஆகும். [8]
அவர் ஒரு சிற்பி பயிற்சி ஸ்டுடியோ, சுவர்ணம் நிறுவனம் மற்றும் சுவர்ணம் ஏற்றுமதி என்ற வணிக நிறுவனத்தையும் நிறுவியுள்ளார். [9]
இந்திய அரசாங்கம் 1992 [10] ஆம் ஆண்டிற்கான பத்மசிறீ விருதை அவருக்கு வழங்கி பெருமைப்படுத்தியது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)"Padmashri Muthiah Sthapathi, The Master Shilpi" பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம். Hindu Temple of Minnesota. 2015. Retrieved 29 September 2015.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)