முந்திரா துறைமுகம்

முந்திரா துறைமுகம்
அதானி முந்திரா துறைமுகம்
Map
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும்
அமைவிடம்
நாடு இந்தியா
அமைவிடம்முந்திரா
ஆள்கூற்றுகள்22°44′46″N 69°42′00″E / 22.746°N 69.700°E / 22.746; 69.700
விவரங்கள்
நிர்வகிப்பாளர்அதானி_போர்ட்ஸ்_&_ஸ்பெஷல்_எகனாமிக்_ஜோன்_லிமிடெட்
உரிமையாளர்அதானி குழுமம்
நிறுத்தற் தளங்கள்24
CEOகரண் அதானி
Terminals10
புள்ளிவிவரங்கள்
ஆண்டு சரக்கு டன்னேஜ்139 மில்லியன் டன் (2019-20)[1]
ஆண்டு கொள்கலன் அளவு34,80,000 TEU (2016-2017)[1]
வலைத்தளம்
port of Mundra
முந்திரா துறைமுகத்தின் சரக்கு முனையம்

முந்திரா துறைமுகம்(Mundra Port) இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கட்சு மாவட்டத்தில் உள்ள முந்திரா கடற்கரை நகரத்தில் உள்ள மிகபெரிய தனியார் துறைமுகம் ஆகும்.இது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது.முன்னதாக முந்திரா துறைமுகம் அதானி குழுமத்திற்க்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிறுவனத்தின் முலம் நிர்வகிக்கப்படுகிறது.[2]

2019-20 நிதியாண்டில் முந்த்ரா துறைமுகம் 130 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டது.

வரலாறு

[தொகு]

முந்திரா துறைமுகம் ஒரு தனியார் துறைமுகமாகும் , மேலும் இது ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.1998 ஆம் ஆண்டில் குஜராத் அதானி போர் லிமிடெட் (ஜிஏபிஎல்) என தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2001 இல் செயல்படத் தொடங்கியது.

துறைமுக வரலாறு

[தொகு]

1994 ஆம் ஆண்டில், குஜராத் கடல் வாரியம் முந்த்ரா துறைமுகத்தில் ஜட்டியை அமைக்க ஒப்புதல் அளித்தது.1998 இல் இந்த துறைமுகம் செயல் பட துவங்கியது[3].

2001 இல் தனியார் ரயில்பாதை முந்த்ரா- அடிபுர் வழியாக முடிக்கப்பட்டது மற்றும் இந்த ரயில்பாதை 2002ல் இந்திய ரயில்வே வரியத்தில் இணைக்கபட்டது.

2002 ஆம் ஆண்டில், குரு கோவிந்த சிங் சுத்திகரிப்பு நிலையங்கள் கச்சா எண்ணெயை கையாள முந்த்ரா துறைமுகத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.2002 ஆம் ஆண்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் உடன் ஒற்றை-புள்ளி மூரிங் வசதியை அமைப்பதற்கும், முந்த்ராவில் கச்சா எண்ணெயைக் கையாளுவதற்க்கும் கூடுதல் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.2005 ஆம் ஆண்டில், அதானி போர்ட் லிமிடெட் மற்றும் குஜராத் அதானி போர்ட் லிமிடெட் ஆகியவை இணைக்கப்பட்டன. 2005 இன் பிற்பகுதியில், ஒற்றை-புள்ளி மூரிங் செயல்பாட்டுக்கு வந்தது.

முந்திரா சிறப்பு பொருளாதார மண்டலம் 2003 இல் இணைக்கப்பட்டது.இது இந்தியாவின் முதல் பல தயாரிப்பு துறைமூக அடிப்படையிலான சிறப்பு பொருளாதார மண்டலமாக மாறியது.டெர்மினல்2 இல் இரண்டு புதிய பெர்த்த்கள் மொத்த சரக்குகளை கையாள செயல்பட்டன. இரடை அடுக்கு கொள்கலன் ரயில் இயக்கத் தொடங்கியது.முந்த்ரா சிறப்பு பொருளாதார மனண்டலம் மற்றும் அதானி ராசயன தொழில்ச்சாலை ஆகியகிவை குஜராத் அதானி போர்ட் லிமிடெட் உடன் இணைக்கப்பட்டது, மேலும் நிறுவனத்தின் பெயர் முந்திரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமாக 2006 இல் மாற்றப்பட்டது.வாகனங்களினக ஏற்றுமதியைக் கையாள மாருதி சுசுக்கி இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் 2008 இல் ஒரு சேவை ஒப்பந்தம் கையெழுத்தானது[4].

துறைமுக தளவமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு

[தொகு]

துறைமுகத்தில் ஒரு ஆழமான வரைவு உள்ளது, இது பெரிய கப்பல்களை துறைமுகத்திற்குள் எளிதாக வர உதவுகிறது[5].

முந்திரா துறைமுகத்தில் பொருள்கள் சார்ந்த சேமிப்பு பகுதிகள் உள்ளன.துறைமுக வளாகத்திற்குள் இறக்குமதி அல்லது ஏற்றுமதி சரக்குகளை சேமிப்பதற்காக துறைமுகத்தில் 2,25,000 சதுர மீட்டர் மூடிய சேமிப்பு கிடங்கு உள்ளது மற்றும் 3,150,000 சதுர மீட்டர் திறந்த சேமிப்பு கிடங்கு உள்ளது[6].

ஒளி மற்றும் கனரக பொறியியல், திட்ட சரக்கு மற்றும் உடைகள், மருந்துசாயங்கள் மற்றும் சிறப்பு ரசாயன, வேளாண் உற்பத்தி செயலாக்கம், மரம் மற்றும் தளபாடங்கள்,உலகளாவிய வர்த்தகம், உலோகம் மற்றும் பல துறைகளுக்கான வணிக இடமாக முந்திரா துறைமுகம் உருவாக்கப்பட்டு வருகிறது[6].

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுதல்

[தொகு]

2013 ஆம் நடைப்பெற்ற ஆய்வின் அடிப்படையில் முந்த்ரா துறைமூகம் கட்டுமானத்திற்கு சதுப்பு நிலங்கள், சிற்றோடைகளைத் தடுப்பது என மறுக்கமுடியாத ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர், சுலை 29,2013 அன்று ஒரு பொது விசாரணை நடைப்பெற்றது,அங்கு பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த திட்டம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் தாக்கம் குறித்து கேள்விகளை எழுப்பினர்[7].

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. 1.0 1.1 "APSEZ set to become top container port operator".
  2. http://m.economictimes.com/PDAET/articleshow/4839907.cmsஎகனாமிக் டைம்சு 31 சுலை 2009
  3. https://web.archive.org/web/20160313042410/https://www.highbeam.com/doc/1P3-3261380521.html
  4. http://www.thehindubusinessline.com/industry-and-economy/logistics/article2787837.eceபார்த்த நாள் சனவரி 2012
  5. https://web.archive.org/web/20150923211216/http://www.crisil.com/Ratings/RatingList/RatingDocs/mundra-port-special-ec-zone_01jun10.htm?cn=MPSEZL
  6. 6.0 6.1 "வெற்றியின் வணிகம்". 2018-05-01. http://www.superbrandsindia.com/images/brand_pdf/business_3rd_edition_2011/ADANI.pdf. பார்த்த நாள்: 2021-01-10. 
  7. http://www.indiaenvironmentportal.org.in/content/379006/eia-and-environmental-management-plan-for-adani-ports-and-sez-limiteds-ship-recycling-facility-new-mundra-west-port-in-kutch-district-gujarat/ பரணிடப்பட்டது 2018-09-13 at the வந்தவழி இயந்திரம்பார்த்த நாள் 13 செப்டம்பர் 2018